புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம்பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்முனைவர் க.நேசன்.எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி.,

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம 25
தலைப்பு -கவிதைப்போட்டி -தொலை(தொல்லை ) பேசி-
ஓ...தொலைப்பேசியே!
இந்த உலகத்தை
என் உள்ளங்கைக்குள்
கொண்டு வந்தவளே
நீ பேசு
உன்
மனந்திறந்து...
நான்
தொலைப்பேசியாக
பிறந்தேன்.
உன்னுடைய பாசத்தால்
கைப்பேசியானேன்.
ஓ...மனிதா!
என்னைவிட
உன்னையறிந்தவர்
யாருமில்லை
இந்த உலகத்தில்.
உன்பொழுது
என்னில் பிறக்கிறது
என்னில்தான் இறக்கிறது.
கர்ணனுக்கு
கவசகுண்டலம்
உனக்கு
நான்.
காதலிக்கே தெரியாத
அவளழகைக்
கண்டுபிடிக்கும்
ஆசைக்காதலனாய்
என்னைத் தொட்டவுடன்
என்னுள்ளே
புதைந்திருக்கும்
அத்தனை
வித்தைகளையும்
கண்டுபிடிக்கிறாய்.
என்னுடன்
இருந்ததுபோல்
உன் குழந்தையைக்
கொஞ்சியது இல்லை.
உன் மனைவியுடன்
மகிழ்ந்ததும் இல்லை
எண்ணிப் பார்.
உன்
இதயத்தின் மேல்
எப்பொழுதும்
நான்தான்.
உன்
வாழ்க்கைப் பிணக்குகளையும்
என்
வலைப் பின்னலில்தான்
தேடுகிறாய்.
எனக்கு
முகநூல்,சுட்டுரை,
கட்செவியென
எத்தனை நகைகளை
அணிவித்து
அழகுபார்க்கிறாய்.
பொழுது போவது
தெரியாமல்
காதலியுடன்
காலத்தைக் கழிக்கும்
காதலனைப் போல
என்னை
வருடி,வருடி
உன் பொழுதைப்
போக்குகிறாய்.
மனைவி வந்ததும்
பெற்றோரைத் தூக்கியெறியும்
பொல்லாத மகனாக
நான் வந்ததும்
நீ யாருக்கும்
கடிதம் எழுதாமல்
அஞ்சலகத்தையே
மறந்துவிட்டாய்.
என் மனம்
ஒரு கனம்
நின்று போகிறது.
தென்றலாய்
உன்னிடம் வந்தேன்
புயலாகி விட்டேன்.
தொலைப்பேசி
என்கிறாய்
மகிழ்ந்தேன்
தொல்லைப்பேசி
என்றால்
இறப்பேன்
முனைவர் க.நேசன்.எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி.,
தொலை(தொல்லை) பேசி
ஓ...தொலைப்பேசியே!
என்
உள்ளத்தைக் கவர்ந்நவளே !
இந்த உலகத்தை
என் உள்ளங்கைக்குள்
கொண்டு வந்தவளே!
நீ... பாசமுடன்
தொலைபேசி
என்கிறாய்
மகிழ்ந்தேன்.
மிகச் சலிப்புடன்
தொல்லைப்பேசி
என்றால்
மெல்லச் சாவேன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.