புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 9இதயத்தை திருடியவன் இனிமையான இசை மீட்டுகையில் இமைகள் இடைஞ்சல் கொடுக்க அவள் இறுமாப்பும் இடிந்து போனது. மணவாளன் மனது மகிழ்வாக நான் காரணமா என்று ஆவலுடன் அவனை நோக்கி வந்தாள் மயூரி .
ரமேஷின் முக மலர்ச்சி அவளை பூரிக்க வைத்தது . நாணத்துடன் முகம் நோக்கினாள் . என்னிடம் என்னவன் கொண்ட கோபம் மாறிவிட்டதா , ஊடல் இனி கூடலாகும் நேரம் இதுதானோ . புன்னகையால் விண்ணப்பத்தை ஒப்புவித்தால் . ஒப்புவி த்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது போல் அவள் புன்னைகை அவனிடம் தொற்றிகொண்டது. மயூரியின் பூரிப்புக்கு அளவே இருக்கவில்லை

இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது . அவன் சீட்டியடித்த இசைக்கு இவள் இதயம் தாளம் போடுகிறதோ என்ற சந்தேகம் அவளிடம் உருவாகியது . தன்னை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியளாய் ரமேஷ் இன்று நான் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்று நினைக்கிறேன். சற்றும் யோசிக்காமல் உங்கள் வேலை தளத்திற்கு வந்து உங்களை சங்கடபடுத்தியமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள் ரமேஷ் . அவளின் மென்மையான குரல் அவனை சமாதானமாக்க கெஞ்சியது .
ரமேஷின் கண்கள் சிரித்தன. அவனும் கனவுலகில் தன் கனம் இழந்து சஞ்சரித்து கொண்டு இருந்தான் . தன் முன்னே கேள்வியுடன் காத்திருந்த மனைவியை கண்டு திடுக்கிட்டவன், ஏன் மன்னிப்பு கேட்கிறாள் என்று ஒரு கணம் புரியாது விழித்தவன் அன்றைய மதிய சம்பவத்தை தான் குறிப்பிடுகிறாள் என்பதை ஒரு சில கணங்களில் தான் அவனால் ஊகிக்க முடிந்தது.
அந்த சம்பவத்தை கூறுகிறீர்களா, ஆ.... அதை நான் மறந்து விட்டேன் மயூரி என்று மெலிதாக சமாதானபடுத்தினான் . அதை விடுங்கள். எனக்கு இப்பொழுது பசிக்கிறதே . உணவை மேஜைக்கு எடுங்களேன் என்று மீண்டும் உல்லாசமாக சிரித்தான் .
மயூரி பறவையாகவே சிறகடித்தாள். கண்களில் மின்மினி பளபளத்தது, நெஞ்சில் அலை அலையாக உணர்வுகள் பொங்கியது, அவனின் மீது பனிபனியாக அன்பு உறைய சிலு சிலுவென்று உடல் முழுவதும் சிலிர்த்தாள். அவனது புன்னகை செய்த மாயம் அவளுள் குறுகுறுக்க கைகள் துறுதுறுக்க சமையல் செய்த உணவு கமகமக்க பரிமாற கொண்டு வந்தாள்
முதன்முறையாக காதலின் இனிமை அவளை திக்குமுக்காட வைத்தது . முற்றாக தன் கணவனின் அன்பில் திளைத்து காலம் முழுவதும் கட்டுண்டு இருக்கவேண்டும் என்று இறைவனிடம் ஒரு வேண்டுகோளை மனதினுள் விடுத்த படியே ஆசையாக அவன் உண்பதை கண்டு களித்தாள். அவள் வயிறு மட்டுமின்றி உள்ளமும் பசி ஆறியது .
தெய்வீகம் அங்கு தெரிந்தது . தூய அன்பு அந்நிமிடம் அறையில் பரவியது . ஒளிக்கீற்று அவளை வாழ்த்துவது போல் உணர்ந்தாள் மயூரி . எல்லாம் தெரிந்த, எல்லாம் வல்ல இறைவன் இவள் வேண்டுகோளை கேட்டு சிரித்துக்கொண்டார் .
தொடரும்....மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.