புதியவை

இதயத்தால் வாழ்த்துகிறேன் ! *************************** ( எம் . ஜெயராமசர்மா - மெல்பேண் அவுஸ்திரேலியா )
 முச்சங்கம் வைத்து
 முன்னின்றார் தமிழ்வளர்க்க
அச்சங்க வழிசென்று
அமைக்கின்றார் இந்தவிழா
எத்திக்கு உள்ளாரும்
இன்பமுறப் பங்குகொள
தித்திப்பாய் அமைகவென
சிந்தையால் வாழ்த்துகிறேன் !

நல்லதமிழ் சிந்தனையை
நாளெல்லாம் நினைத்துநிற்கும்
வல்லதமிழ் கலைமகளை
மனமார வாழ்த்துகிறேன்
சொல்லிநிற்கும் விழாவாக
சுவைபயக்கும் விழாவாக
எல்லோர்க்கும் பயன்நல்க
இதயத்தால் வாழ்த்துகிறேன் !No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.