புதியவை

உன்னுள் நீ ஒ.சுந்தரமூர்த்தி எம்.ஏ. ,பி.எட் . தமிழாசிரியர் ,


ஆழ்மனதைக் கோயிலென்றே அறிய மாட்டாய்,
அடிமனதில் வாழுமுன்னை உணர மாட்டாய்
தாழ்வான எண்ணமதால் தனிமை கொண்டு
தன்னேற்றம் மறந்தாயே உன்னுள் நீயே !
வாழ்கின்ற வாழ்வதனில் வாசங் கூட்ட
வஞ்சனைகள் செய்யாத தூயோ னாகி
பாழ்பட்ட தமிழுலகம் பாங்கோ டோங்க
பண்பான மாமனிதா உன்னைத் தேடே !

உன்னுள்நீ ஒளியாகி ஒளிர வேண்டும்,
ஒப்பற்ற மாமணிபோ லோங்க வேண்டும்,
மண்ணுள்ளே படிந்துள்ள மாசைப் போக்க
மங்காத மாமணியே உன்னுள் நீயே !
விண்ணோரும் போற்றிடுநல் வாழ்க்கை வாழ
விடியலதை மீட்டெடா உன்னுள் நீயே!
கண்ணுக்குள் ஒளிபோல, மணியேப் போல,
காணலுறாய் வெண்பளிங்கே உன்னுள் மாண்பே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.