புதியவை

இலங்கை வளர்கிறதா நாம் சிந்திக்க வேண்டிய தருணமிது ? NDPHR ஸ்தாபகர் மொஹிடீன் பாவாஇலங்கை வளர்கிறது,  இலங்கை ஒளிர்கிறது,  என அரசியல் கட்சிகள் மாறும் போது எழும் கோஷங்கள் ஒரு புறமிருந்தாலும், நிதர்சனமான உண்மையை பிரதிபலிப்பது புள்ளி விவரங்கள்தான்.

தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து கடந்த இருபது ஆண்டுகளில்  இலங்கையின்  வளர்ச்சியை கணித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, முந்தைய 10 ஆண்டுகளில் இருந்ததை விட அதாவது 2000 முதல் 2010 வரையான காலத்தை விட 2011-வது ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையான காலத்தில்  இலங்கை பின்தங்கியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார சமூக சூழல் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த யுஎன் இஎஸ்சிஏபி என்ற அறிக்கையில்  இலங்கை மற்றும் இந்தியா,சீனாவில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் மூன்று முக்கிய அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி. சமுதாய வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அளவீடுகள் அடிப்படையில் நாடுகள் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. ஏற்றத் தாழ்வு அதிகம் காணப் படுவதோடு வேலையில்லாத் திண்டாட்ட நிலை மிகவும் மோசமாக உள்ளது. இருந்தாலும் இந்த நாடுகள் ஏழ்மை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறி வருகின்றன.

அறிக்கையில் ஏழ்மை ஒழிப்பில் முன்னேற்றம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது எந்த அளவுக்கு என்பது இங்குள்ள அரசியல்வாதிகள், பொருளாதார மேதைகளுக்கே வெளிச்சம். 

கடந்த இருபது ஆண்டுகளில் முதலிடத்தை கஜகஸ்தான் தக்க வைத்திருக்கிறது. ருஷிய குடியரசு, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

முந்தைய கால கட்டத்தை விட முன்னேற்றம் கண்ட நாடுகள் வரிசையில் , ஈரான், சீனா ஆகியன இடம் பெற்றுள்ளன. அண்டை நாடான நேபாளம் கடந்த முறை 15-வது இடத்திலிருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நாம்  சிந்திக்க வேண்டிய தருணமிது எனக் கூறினார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.