புதியவை

நாம் எதிர் நோக்கும் பல சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எளிதாகும் NDPHR ஸ்தாபகர்சில காலங்களாக நமது பிர தேசத்தில் நடை பெறும் சமூக பொது நிகழ்வுகளைப் பார்க்கும் போது எங்கே போய் துலைந்தது  நமது மனித நேயப் ப‌‌ண்பாடுகள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறுகிறார் 
 
அரசியல் வேறுபாடுகளை மறந்து சர்வகட்சியினரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் பண்பாடு நமது பிர தேசத்தில் வளர வேண்டும்
 
அரசியல் அதிகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பொதுவான முறையாகும். அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். பொது நிகழ்ச்சிகளில் அந்த வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
 
சமுதாய ப‌‌ண்பாடு என்று நாம் உரத்த குரலில் பேசி வருகிறோம். அது என்ன என்பதை நாம் செயலிலும் பின்பற்ற வேண்டும். அரசியல் வேறுபாடுகளை மறந்து சர்வகட்சியினரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் பண்பாடு நமது பிர தேசத்தில் வளர வேண்டும். இதில் அரசியல் கட்சி பிரமுகர்களும்  சாதி மத மொழி பேத மின்றி தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.
 
மேலும் பிரதேசங்களுக்கு  அரசாங்கத்தால் அவிவிருத்திகளுக்கு ஒதுக்கப் படும் நிதிகள் அத்தியாவசிய  தேவைகள் இனம் காணப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பிரதேசே வாத பேதம் இன்றி பகிர்ந்த அளிக்கப் பட வேண்டும். அத்துடன் ஒரு அரசியல்வாதியால் செய்ய முற்படும் அவிவிருத்திகளுக்கு மற்ற அரசியல்வாதிகள் காழ்ப்புணர்வு கொன்டு சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய அவிவிருத்திகளுக்கு முட்டுக் கட்டை போடக் கூடாது
 
அத்தோடு தொடங்கப் பட்ட சகல திட்டங்களும் பேரளவில் இல்லாமல் அவை அனைத்தும் காலத்தோடு முடிக்கப் படல் வேண்டும்.
 
நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து சேத உணர்வோடு தோன்றிய நாம் இவ்வாறான பேத உணர்வு இன்றி வாழப் பழகுவதன் மூலம் நாம் எதிர் நோக்கும் பல  சமுதாயப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பது  எளிதாகும்
 
இவ்வாறான செயல் பண்பாடுகளில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி திடமான கொள்கைகளை நடை முறையில் கடைப் பிடிக்கும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.