புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் டிசம்பர் மாதத்தின் முதலாவது தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவியருவி பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்- எஸ்.எஸ்.எம். றபீக்- கலா வர்ணன்-


உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி டிசம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ 
போட்டிக் கவிதை இலக்கம்11

நண்பனே...! - என்
அன்பு நண்பனே ...!!
கற்றவனாய் - வசதி பெற்றவனாய்
சமூகமதில் வாழ்ந்திருக்கும் நீ..
திறமைகள் பலவற்றை
அடுக்கியவனாய் ..
அடுத்தவர்க்குக் கொடுக்காமல்
அமுக்கியவனாய் ..
உனக்குள் நீ வாழ்கிறாய் ...
கற்றறிந்து உயர்ந்தவனாய்
தலை உயர்த்தி நிற்கின்றாய் ..
கடைக்கண்ணால் நம்
சமூகமதை சற்றே நீ பார் ..
சுற்றியிருக்கும் எளியவர்கள்
கற்றிடவே கஷ்டப்பட்டு
கல்வியையே கைவிட்டு
கண்டபடி திரிகின்றார் ..
உன் ஆற்றல் அவர்க்கீந்தால்
அர்த்தமுள்ள மனிதர்களாய்
அகிலத்தில் வாழ்ந்திடுவார் ..
சுயநலத்தைச் சுமந்தவனாய்
உனக்குள் நீ வாழ்கிறாய் ..
கற்றிட்ட உன்
கடமையை எதிர்பார்த்தே
கண்கள் மூடாமல் நிற்கிறது
எதிர்கால சமூகம்..
உனக்குள் முடங்கியே
வாழ்நாளைக் கழித்திடாமல்
மனக் கண்களைத் திறந்து
கொஞ்சம் எட்டிப்பார் ...
உன்னால் தழைத்திடும் சமூகம்
உருப்படாமல் போவதைத்
தடுத்திடப் பார்..
உன்னை மட்டும் பார்த்தபடி
வாழ்ந்திடாதே ...
உனக்குள் நீ வாழ்கிறாய்
உனக்குள்ளே உனக்கு
நீதான் வழிகாட்டி ..
ஒரு நிமிடம் ... ஒரேயொரு நிமிடம்
உனக்குள் உன்னோடு நீ
கதைத்துப் பார்..
உனக்கே புரிந்திடும்
உனக்குள் இருக்கும் நீ..
நல்லவனாய் ... உண்மையாளனாய்
உலகில் பிறந்திட்ட
பெருமையைக் கண்டிடுவாய் 
....
பெயர்: எஸ்.எஸ்.எம். றபீக்# கலா வர்ணன் #
(ஓய்வு பெற்ற ஆசிரியர் )
முகவரி: 7/2, கெனல் வீதி, புத்தளம் .
இலங்கை
.
மின்னஞ்சல் : rafeekssm @gmail .com
முகநூல் : SsmRafeek

தடாகத்தின் பாராட்டுக்கள்  எஸ்.எஸ்.எம். றபீக்கலாவர்ணன் அவர்களுக்கு நன்றி  


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.