உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2016
போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ
போட்டிஇலக்கம் 20
உழைத்தே நீயும் வியர்வையை சிந்து
உழைத்தே நீயும் தோல்வியை முந்து
உலகம் போற்றவே நீயும் வாழ்ந்திடு
உன்னில்நீ உழைப்பையே நிலையாய் நிருத்திடு !
உழைத்திடு எந்நாளும் நீமே லோங்கவே !
உதவிகள் செய்திடு பலர்வாழ் வோங்கவே !
உன்வாழ்வை உயர்த்திடு ஊர் போற்றவே !
உன்னில்நீ ஏற்றிடு பணிவை பார்போற்றவே !
உண்மையாய் நீயும் தினம்உழைத் திட்டாலே !
உயர்ந்திடும் உன்வாழ்வு இவ்வுலக வானிலே !
உழைத்திடு உழைத்திடு நாளும்நீ உயரவே
உன்னில்நீ புகுத்திடு புதுப்புது சிந்தனையை !
ஊனம் உன்னில் குடிகொண்டிருந் தாலும்
உன்னுறவுகள் உன்னை ஒதுக்கி வைத்தாலும்
உன்வாழ்வை சிலர்எள்ளி நகையாடி னாலும்
உன்னில்நீ வைத்திடு நல்நம்பிக் கையை !
உடல்தானம் செய்யவே நீயும் நினைத்திடு !
உறுப்புதானம் செய்தே நீயும் வாழ்ந்திடு !
உலகுக்கு தானத்தை எடுத்தே உரைத்திடு !
உன்னில்நீ வளர்த்திடு தொடர்தா னத்தை!
உயரம்தான்டியே ஊனம் உலகை வென்றது !
உலகக் கோப்பையை ஒலிம்பிக்கில் பறித்தது !
உலகம் உன்னைப் போற்றிடவே ஊனம்மறந்திடு!
உன்னில்நீ உயர்ந்தே வானத்தை தொட்டிடு !
குறள்நதி (எம் .சக்திவேல்)
3, திருவேற்காடு ,சென்னை-77,
தமிழ்நாடு , இந்தியா,
Kuralnathi1330@gmail.com
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.