புதியவை

மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 01)திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம் இறைவன் தன் திருவடியால் இந்நிலமிசை வந்து அருள பாலித்துத் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை பெற்றது " திருவாசகம் ". இத்திருவாசகத்தைக் கேட்டவரும் உருகுவார்.. படித்தவரும் உருகுவார்.இதனாலத்தான் " திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் "என்று சொன்னார்கள் போலும்.தேன் மருத்துவ குணம் கொண்டது.தானும் கெடாது தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தனமை கொண்டது.இதனால்த்தான் " திருவாசகம் என்னும் தேன் " என்று யாவரும் ஏற்றிப் போற்றுகின்றனர்.தமிழர் மட்டுமின்றி மேனாட்டி னரும் திருவாசகத்தை உயர்ந்த நிலையிலேயே வைத்துள்ளனர்.கல்லையும்கரைக்கும் தன்மையுடையது திருவாசகம்.கல் நெஞ்சையே நல்நெஞ்சாக்கும் பெருமையும் உடையது  திருவாசகம்..
   தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் இரு கண்களாகத் திகழ்கின்றன.அந்தச் சைவத்தின் முழும்தல் தெய்வமாகச் சிவனே விளங்குகின்றார்.' சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை" என்பது சைவத்தின் அறுதியான முடிவாகும்.அன்பு நெறியால் இறைவனை காட்டுவன தோத்திரங்கள்.அறிவு நெறியால் இறைவனைக் காட்டுவன சாத்திரங்கள்.இவ்விரு நெறிகளுமே இறையுண்மையையே காட்டி நிற்கின்றன.
   வேதாந்தம் என்னும் ஆரா அருங்கனி பிழிந்த சாரம் கொண்டதே சைவசித்தாந்தம். இது தமிழ் நாட்டுடனும் ஈழத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டது.இப்பகுதிகளின் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்துள்ளது.
   சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்தது சைவசித்தாந்தம்.ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும் , தனித்தன்மையையும் கெடுக்காது நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை உண்மையானதும், பயனுடையதுமாக்கி _ இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச்சிறப்பு " சைவசித்தாந்துக்கு மட்டுமே உரியது ". " இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிகமேம்பட்டது " என்பதில் ஐயமில்லை என மேனாட்டு அறிஞரான ஜி..யூ ,போப் கூற - " சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளதும் உணர்வினது சிகரம் " ஏற்றிப் போற்றுகின்றார் கெளடி என்னும் அறிஞர்.
   சைவசித்தாந்தம் மூன்று பொருள்களைப் பற்றிச் சொல்கிறது.நமது சிந்தனைக்கும் ,ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் அனைத்தையும் இந்த மூன்று பொருள்களுள்ளும் அடக்கலாம்.இறை, உயிர், தளை, என்பனவே அவை.
   சைவசித்தாந்துக்கு முக்கிய ஆதாரங்கள் வேதங்களா ஆகமங்களா என்று நோக்கும் இடத்து இரண்டுமே பிரமாண நூல்கள்தான்.எனினும் வேதங்களைவிட ஆகமங்களே 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.