புதியவை

மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 02) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்


முக்கியமானவை எனக் கொள்ளமுடிகிறது.வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்ளுவது மரபாக உள்ளது.ஆகமம் என்பதற்கு விளக்கம் - பதி, பசு , பாசம் பற்றிக்கூறுவது என்று அறிகின்றோம்

     தோத்திஅரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் கண்ணாக விளங்குவதோடு நின்று    விடாமல் - சைவசித்தாந்தக் கருதுக்களையும் தன்னகதே கொண்டு நிற்கின்றன் என்பது முக்கியமானதாகும்.இந்த நிலையில் திருவாசகம் என்னும் தேனானது - தோத்திரநூல் எந்த அளவுக்குச் சைவசித்தாந்த உண்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பது பொருதமாய் இருக்கும் அல்லவா?

தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி                                                  அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை                
மருவா நெறியளிக்கும் வாதபூரர் எங்கோன்              
திருவா சகமென்னும் தேன்.

  தொல்லைக்குக் காரணம் பிறவி.அதை எடுபதே பெரிய தளையாகும்.பிறவிப் பிணியகல   இறையருள் தேவை.இறையருள் கிட்டினால் ஆனந்தம்.பிறவி நோயும் அறியாமையும் அகன்றவுடன் சிவானந்தம் ஆகிய பேரானந்தம் விளையும்.அந்த ஆனந்தத்தை எப்படிப் பெறலாம் என்று எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது திருவாசகமாகிய தேன் என்று இப்படல் காட்டி நிற்கிறதல்லவா? அதுமட்டுமல்ல சைவசித்தாந்த உண்மையும் இதனுள் காட்டப்படுவது நோக்கத்தக்கது.

 எமது உடம்பில் சிரசு மேலானது.அதற்கு மேலாக இருப்பது சிகையாகும்.சிகைக்கு மேலொன்றுமில்லை.ஆகவே சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்துக்கு மேல் சிறந்த நூல் இல்லை என்று பெரியவர்கள் சொல்லுவர்.இந்தத் திருவாசகத்தில் " சிவபுராணம் " முக்கிய பகுதியாகக் கொள்ளப்படுகிறது.அதன் ஆரம்பமே சைவ  சித்தாந்தத்தின் முக்கிய கருவைக் கொண்டிருக்கிறது எனலாம்.
                    " நமச் சிவாய வாழ்க "

 "  நமச்சிவாய " என்பது திருவைந்தெழுத்து மந்திரமாகும்.இதன் பொருள் -
                      ம - பாசம்  
                      ய - பசு
                      சி - பதி
                      ந - திரோதான சக்தி
                      வ - அருட்சக்தி  
                                                            
திருவாசகம் இறைவனுடைய தலைமைப் பண்பையும், அவனுக்குட்பட்ட உயிர்களின் அடிமைப் பண்பையும், பொருத்தமாக விளக்கிச் சொல்வதைக் காணலாம்.உயிர்கள் மலம் நீங்கி இறைவன் அருள் பெற மணிவாசகர் பாடியதால் திருவைந்தெழுத்தின் எல்லா வடிவங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.