புதியவை

மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 03) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்சைவசித்தாந்தம் - மாயை, கன்மம், வினை பற்றியெல்லம் சொல்லுகிறது.பிறப்புக்கு காரணம் வினை.ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும்- பிறப்பதற்கும் - இறப்பதற்கும், அனுவிப்பதற்கும் - இன்ப துன்பங்களுக்கும் - வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் -
           14 - மாயப் பிறப்பறுக்கும்
           20 - முந்தை வினை முழுதும்
           25 - பொல்லா வினையேன்
           26 - புல்லாகிப் பூடாய் ...............  எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்
   பதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலு கிறான்.இறைவனின் அருள் நோக்கம் ஒன்றினால்த்தான் ஆன்மாக்களின் மல் பந்தம் அகல முடியும்.இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.
            18 - அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி
            38 -  மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
            40 - அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
             42 - ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
             48 -  பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
             64 - பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
             78 - காக்கும் எம்காவலனே
             87 - மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
             88 - கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
             91 அல்லல் பிறவி அறுப்பானே ........................
                                                                  ( திருவாசகம் )
     மணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் - இஅவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங் கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா ?
     உயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது.  பதியினை அடையும் நிலை இயற்கையானது.இக்காரணத்தினால்த்தான் யாராவது இறந்துபோனால் " இயற்கை எய்தினார் " என்கிறோம்.இந்த் உலக வாழ்வு செயற்கை யானது.அது வருவதற்குக் காரணம் அவா ஆகும்.அவா ஆனது விரைவில் மறைய மாட்டது.அதனை முயன்றே போக்கவேண்டும்.அப்படிப் போக்கினால் இறைவனிடம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.