புதியவை

மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 04) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்இருந்து நீங்காத இயற்கைத் தன்மையைப் பெறும்.இதனை வள்ளுவர் " பேரா இயற்கை " என்று குறிப்பிட்டாரோ எனக் கருதக்கூடியதாக இருக்கிறது.இக்கருத்தை திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகத்தில் காட்டுவதும் நோக்கத்தக்கது.

இன்றெனக் கருளி யிருள் கடிந் துள்ளக்
தெழுகின்ற ஞாயிறே போன்று                
நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
னீயலால் பிறிது மற்றின்மை          
சென்று சென்றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்                                         திருப்பெருந் துறையுறை சிவனே
யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை  
யாருன்னை யறிகிற்பாரே.

 உயிரனது சிவத்தோடு ஒடுங்கும் பேரருள் நிலை இங்கு காட்டப்படுகிறது. இதனால் திருவாசகத்தில் இதனை ' இருதயப் பாடல் " எனப் பெரியவர்கள் கருதுவர். " சென்று  சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் " என்னும் அடிகள் மூலமாக உயிரின் பாசநீக்கம் - சிவப்பேறு காட்டப்படுகிறது.

  மலம் என்று சொல்லும் பொழுது எமக்கெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறதல்லவா?  முகத்தைச் சுழிக்கின்றோமல்லவா ? ஆனால் இந்தச் சொல் தத்துவ விளக்கமாக சைவ சித்தாந்தத்தில் இடம் பெற்று நிற்கிறது.சகவிதமான சிக்கல்களுக்கும் " மலமே" காரண மாக இருக்கிறது.இந்த மலமானது ஆணவம், கன்மம், மாயை எனச் சைவசித்தாந்ததில் பேசப்படுகிறது.அறியாமயை விளைவிப்பது ஆணவ மலம்.இன்ப, துன்பங்களை விளைவிப்பது கன்ம மலம்.மயக்கத்தை உண்டுபண்ணுவது மாயா மலம்.இந்த மயக்கத் தினால் - ஆன்மாவானது தன்னை உடம்பாகவும், உலகில் காணப்படும் போகங்களை உண்மையானதெனவும் எண்ணிவிடுகிந்றது.இதனால் மாயையும் மலங்களில் ஒன்றாகிவிடுகிறது
.
   திருவாசகம் மலம் பற்றிக் காட்டி நிற்கிறது.மலத்தைக் காட்டுவதோடு - அதனைப் போக்குதற்கு யார்தான் உள்ளார் என்பதையும் கூறி நிறபது நோக்கத்தக்கது.

     111 - மூலமாகிய மும்மலமறுக்கும்
     112 - தூயமேனிச் சுடர்விடு சோதி ( கீர்த்தித் திருவகல் )    
      122 - முத்தா போற்றி முதல்வா போற்றி
      128 - மன்னிய திருவருள் மலையே போற்றி
      194 _ மருவிய கருணை மலையே போற்றி( போற்றித் திருவகல் )
             8 ..... உழிதரு காலத்து உன் அடியேன்
                   செய்த வல்வினையைக்

கழிதரு காலமும் ஆய் அவை காத்து
                  எம்மைக் காப்பவனே

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.