புதியவை

மெல்பேண்அவுஸ்த்திரேலியாமகாதேவஐயர் ஜெயராமசர்மா எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் -05)திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்16 - நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் (திருச்சதகம் )
 2 - உள்ள மலம் மூன்றும் மய உகு பெரும்பண்டாய நான்மறை  20 20 -
வாழ்கின்றாய் வாழத நெஞ்சமே வல்வினைப் பட்                                                    டாழ் கின்றா யாழாமற் காப்பனை யேத்தாதே                                                 சூழ்கின்றய் கேடுனுக்குச் சொல் கின்றேன் பல்காலும்                                  வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே( திருச்சதகம் )
மூலமலம் வினைபற்றிச் சொல்லி - இவை போக இறைவன் துணை எத்துணை அவசியமானது என்பதையும் இப்பாடல் சுட்டி நிற்பது நோக்கத்தக்தாகும்.
1 - முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்                                 பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வாண்ணஞ்                                 சித்தமலம் யறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட                                             அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே,
2 -மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்                               நம்மையும் ஓர் பொருளாக்கி ...
என்று காட்டி நிற்கும் திருவாசகம் சொல்லும் இறைவனின் பலபரிபாக நிலையும் ஆகொள்ளும் நிலையும் , யாவரும் விளங்கும் வண்ணம் இருக்கின்றது என்பது புலனா கிறதல்லவா ?

 பிறவிக்குக் காரணம் மலங்கள்தான்.எனவேதான் திருவாசகம்" ஆர்த்த பிறவித்துயர்" என்று கூறியதும் நோக்கத்தக்கது.திருவம்மானையில் " எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு ' என்றும் ... " கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடந்த வேதியனே " .. என்றும்.. " கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட " .. என்றும் _ " இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து " என்றும் , அப்பிறயைப் போக்க இறைவனே துணை யென்பதும் காட்டப்பட்ட விதம் யாவரது உள்ளத்தும் பசுமரத்தாணி போல் பதியுமல்லவா ?

 வேற்றுவிகார விஅடக்குடம்பின் உட்கிடக்க ஆற்றேன் " என்கிறார் மணிவாசகர்.   இந்த உடம்பு புண்மயமானத்." மலஞ்சோரும் ஒன்பதும் வாயிற்குடிலை " என்று சொல் லுவதைக் கேட்கும் பொழுது உடம்பின் அருவருப்புத் தெரிகிறதல்லவா? அது மட்டு மல்ல " புறந்தோல் போர்த்தங்கு புழுவழுக்கு மூடி "இதுவும் உடம்புதான் இதனால் இந்த உடம்பினுள் இருக்கும் பிறவி நிலைக்கு " ஆற்றேன் ஆற்றேன் " என்று மணி வாசகர் திருவாசகம் மூலம் வெளிப்படுத்தி நிற்பது தத்துவத்தின் சாரம் அல்லவா ?ஆறுதல் தருபவன் யாரெனின் அது இறைவன் மட்டுமே என்பது திருவாசகத்தின் கருத்துத்தானே ! இதனால்த்தான் "அவன் அருளாலே அவன்தாழ் வணங்கி " என்று போதித்து நிற்கிறது.
 சைவசித்தாந்தம் கடவுள்க் கொள்கையை முக்கியமாகக் கருதுகிறது. " சிவன் " என்னும் சொல்லிலிருந்து வந்ததுவே " சைவம் " ஆகும்.சித்தாந்தம் எனக் குறிப்பிடாது   " சைவசித்தாந்தம் " என்று சிவத்தையும் சம்பந்தப்படுத்தி வழங்குவதிலிருந்து சிவனுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிற  தல்லவா ?

 சைவசித்தாந்தம் " பதி " என்று குறிப்பிடுவது இறைவனையே.இந்த இறைவனை  இறை, கடவுள், பதி, பரமசிவம், சிவம், ஈசன், பேருயிர்,பரமாத்மா என்று பல  பெயர்களில் அழைப்பதைக் காண்கிறோமல்லவா ?ஒரு நாமமோ ஒரு உருவமோ இல்லா இறைவனுக்குப் பல நாமங்கள் கொடுத்து வணங்குவதையும் காண்கிறோம் தானே ! இதில் " கடவுள் " என்ற சொல் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். உள்ளத்தைக் கடந்தவர், உலகையும் கடந்தவர், உலகுள்ளும் இருப்பவர், உயிர்கள் உள்ளும் வியாபித்து நிற்பவர், இந்தக் கருத்துக்கள் சைவசித்தாந்தமே.இதனை மணிவாசகரும் திருவாசகத்தில் காட்டுகிறார்.
           137 - பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
           138 - நீ  ரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
           139 - தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
           140 - வளியிட இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
           141 - வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
 திருப்பள்ளி எழுச்சியால் இறைவனைத் துயில் எழுப்ப மணிவாசகர் முயலுகிறார். எம்மை எல்லாம் அஞ்ஞான இருளில் இருந்து எழுப்புவதற்கு இது உதவுகிறதல்லவா?     திருப்பள்ளி எழுச்சியில் இறைவனைப் பற்றி மணிவாச்கர் காட்டுவது சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை விளக்கி நிற்பதாக இருக்கிறது.
பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால் போக்கு இலன்
வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரைக்
சீதம் கொள்வயல் திருபெருந்துறை மன்னா                                                   சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து                                            
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்                                             எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
கடவுள் பற்றிச் சைவசித்தாந்தம் என்ன கருதுகின்றது என்பதற்கு மேலும் பலவற்றை திருவாசகம் தந்து நிற்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.