புதியவை

மெல்பேண்அவுஸ்த்திரேலியாமகாதேவஐயர் ஜெயராமசர்மா எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் -06)திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்


                                                                                                             
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி                                                              
ஐயா போற்றி அணுவே போற்றி                                                             
சைவா போற்றி தலைவா போற்றி                                                                                                 
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி                                                          
அருமையில் எளிய அழகே போற்றி                                                            
கருமுகில் எளிய அழகே போற்றி                                                             
அழிவிலா ஆனந்த வாரி போற்றி                                                                   
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி                                                            
முழுவதும் இறந்த முதல்வா போற்றி                                                            
சடை இடை கங்கை தரித்தாய் போற்றி                                                              
தென்நாடு உடைய சிவனே போற்றி                                                                
எந்நாட்டவர்கும் இறைவா போற்றி                                                             
அரியாய் போற்றி அமலா போற்றி                                                                 
அருவம் உருவமும் ஆனாய் போற்றி                                                                 
துரியமும் இறந்த சுடரே போற்றி                                                                 
சிந்தனைக்கும் அரிய சிவமே போற்றி                                          
புரம்பல எரித்த புராணா போற்றி                                                                   
பரம் பரம் சோதிப்பரனே போற்றி 


திருச்சதகத்தில் உள்ள கீழ்வரும் பாடல் சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை மிகவும் சிறப்பாகக் காட்டி நிற்கிறது.                                
 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்          கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே !

   இறை அனுபவத்தை மணிவாசகர் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாங்கு அவரது எளிமையினையே காட்டி நிற்கிறது.இரக்கமும், உருக்கமும், இணைந்து இறை அனுபவத்தை உணரப்பண்ணி இருக்கிறது திருவாசகமென்னும் தேன் என்றால் அது மிகையாகாது.மணிவாசகர் " அம்மையே அப்பா ஒப்பிலா மணியே " என அழைத்து    "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை           உருக்கியவன் " என்று விளக்குகின்றார்." ஒப்புனக்கில்லா ஒருவனே " - " பாசவேர் அறுக்கும் பழம் பொருளே, பிறவி வேரறுத்து என் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா "  என்றும் கூறிநிற்கின்றார்.இவையெல்லாம் சைவசித்தாந்த நெறிகளைக் காட்டும் திருவாசகச் செய்திகள் எனலாம்
.
   சைவசித்தந்தம் தமிழர் சொத்து.சைவத்தின் சொத்து. திருவாசகம் - தமிழிரதும் சைவத்தினதும் சொத்தாகும். சொத்துக்களைப் பிரிப்பது முறையற்றது. சைவசித்தாந்தச் சொத்து திருவாசகச் சொத்தினுள் இரிக்கின்றது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம் அல்லவா? சைவசித்தாந்தத்துக்குச் சாத்திர நூல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ   அதே அளவு தோத்திர நூல்களும் முக்கியமானதாக இருக்கின்றன.]

     அந்தவகையில் தோத்திர நூலான" திருவாசகம் என்னும் தேன் " சைவசித்தாந்தக் கருதுக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறதல்லவா? என்வே சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம், இறைபற்றி அறியத் " திருவாசகம்   என்னும் தேனை " நாடலாம் என்னும் எண்ணம் உங்கள் உள்ளமதில் தோன்றி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

             மேனமைகொள் சைவநீதி விளங்கத் திருவாசகத்தேனைப்                     பருகுங்கள் ! இறையடி தொழுமின்கள் ! ஈசன் புகழ் பாடுங்கள் 
            விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண் காரணன்                                உரௌயெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும்                                      வாதவூர் அண்ணல்    மலர்வாய் பிறந்த                                                       வாசகத் தேனோ  யாதோ சிறந்தது என்குவீர்                                                 ஆயின்    வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி                                                       நெஞ்சு நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்                                                      திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்                                                               கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
              தொடுமணற் கேணியின் சுரந்து நீர்பாய்                              
        அன்பர் ஆகுநர் அன்றி  மன்பதை உலகில் மற்றையர் இலரே .                   
    ( சிவப்பிரகாச சுவாமிகள் )

முற்றும்                             No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.