புதியவை

ஜெர்மன்மீரா எழுதும் தொடர்கதைவர்ணங்களின் வர்ணஜாலம்அத்தியாயம் 16


சுற்றி சுழன்ற கண்களில் , சுற்றத்தவர் சூழ நின்றாலும் , சூடிக்கொண்ட சுந்தரன் களவாடப்பட்டு விட்டான் அந்நிய சுந்தரி ஒருத்தியாள்“ .
மயூரி திணறினாள் . பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பல விருந்தாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் அவளுக்கு தெரிந்தவர் என்று அந்த கூட்டத்தில் ஒரே ஒருவனே , அவளுக்குரியவன் , ஆனால் அவனை தான் அவள் விழிகளிலிருந்து தொலைத்து விட்டாள் . அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது . பலரின் பார்வையில் இவள் விழுந்து நழுவி போனாள்.
சிற்றுண்டிகள் நிறைந்த தட்டினை பணியாள் கொண்டு வந்தான் . எதை எடுக்கிறோம் என்று தெரியாமலே ஒரு சிற்றுண்டியை எடுத்தவாறே ஒரு ஓரமாக சென்று மறைவாக நின்று கொண்டாள் . எப்படியும் ரமேஷ் அவளை தேடி ஒரு சில நிமிடங்களில் வரத்தானே வேண்டும் . அனோஜா அவள் நண்பர்கள் புடை சூழ இவள் கணவனை உரிமையுடன் பற்றிக்கொண்டு நின்றதை காண மயூரியினால் பொறுக்கமுடியாமல் பொறும்ம தான் முடிந்தது . அழகான குரலில் தன்னை அன்புடன் அழைத்த நண்பி என்று நினைந்து ஆவலுடன் வந்த மயூரிக்கு அனோஜாவின் செய்கை வெறுப்பை தந்தது .
எல்லோரும் அனோஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கேக் வெட்டும் நேரமும் வந்தது . ஆனால் ரமேஷ் தன் மனைவி தன்னுடன் வந்ததை மறந்தவனாக அனோஜா அருகிலேயே அவள் மகுடியில் மயங்கியவனாக நின்று கொண்டிருந்தான் . „என் கணவன் எப்படி என்னை மறக்க முடியும் ?. என்னையல்லவா அவன் பெருமையுடன் கூட்டிச்சென்று ஒவ்வொருவரிடமும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் . ஆனால் மாறாக, அனோஜா என்னுடையவனை தன் நண்பர்களிடம் கூட்டிச்சென்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கிறாளே“. தாங்கிக்கொள்ள முடியாத மயூரி ஆவேசத்துடன் ஓடிச்சென்று „ரமேஷ் என் கணவன் , நீ யார், என் கணவனிடம் உரிமை கொண்டாடுவது“ என்று பலத்த குரலில் கத்த வேண்டும் போலிருந்தது .
பிறந்தநாள் வாழ்த்து பாடி முடித்தவர்கள் தங்கள் பரிசு பொருட்களை அனோஜாவிடம் கொடுக்க தொடங்கினர் . தாங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லையே என்ற எண்ணம் அவள் மனதில் உருவான அந்த கணம் ரமேஷ் தன் காற்சட்டை பொக்கெட்டிலிருந்து ஏதோ வெளியே எடுப்பதை கவனித்தவள் ஆனால் இந்த நகை பெட்டி அவளுக்கானதல்லவா .... மயூரிக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை . மீண்டும், மீண்டும் ஏமாற்றங்களா ?
„வாவ் ரமேஷ்“ என்ற அனோஜாவின் பூரிப்பு இவள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த ஆசை , அன்பு, காதல் , ஏக்கம் , நம்பிக்கை என்ற அனைத்தும் அந்த கனத்தில் மரித்தது. அவளே அறியாது கண்கள் கண்ணீர் சொரிந்தன . கால்கள் எப்படி துணிவு கொண்டு வெளியேறியது என்று தெரியாமலே இருண்ட அந்த நேரத்தில் தன் இருட்டையும் சேர்த்து போர்த்திக்கொண்டு அநாதரவற்று தனியாக நின்றாள் . அவளுடன் என்றும் துணையாக இருப்பேன் என்று அக்கினி முன் சத்தியம் செய்தவனோ தன் நண்பியின் பிறந்தநாளில் குதூகலித்து கொண்டிருந்தான் .
„இந்த இரவு இப்படியே நின்று விடாது . அதிகாலை வெளிச்சம் வந்தே தீரும் . நீங்கள் படும் வேதனை விரைவில் மாறும் . ஏமாற்றங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் . உங்கள் கண்ணீரை துடையுங்கள்“ என்று ஒரு ஆறுதலான குரல் பின்னிருந்து கேட்டது . மருண்ட விழிகளுடன் மயூரி நிமிர்ந்து நோக்கினாள் . அவள் பார்வையில் அடிக்கடி கண்ட அந்த நெடிய ஆடவன் நின்று கொண்டு இருந்தான் கனிவை கண்களில் தேக்கி வைத்த படி .
தொடரும் 
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.