புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்- நுஸ்ஹி M.I.M.NUSKY காத்தான் குடி உங்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் நுஸ்ஹிபோட்டி இலக்கம் மாதம் -86 வது-தலைப்பு--- உனக்கென்ன லாபம்.கவிதை என் --05.
உனக்கு என்ன லாபம்
அடுத்தவன் வீட்டு குறைகளை
அறு சுவையோடு மற்றவர்களுக்கு பகிர்கிறாய்
அவன் அவன் படும் துன்பம் கண்டு
அலாதி இன்பம் கொள்கிறாய்

மனிதா ...!
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

முயற்ச்சி செய்து உயர்ச்சி அடையும்
உன் நண்பன் சந்தோசம்
தூக்கம் இன்றி உழைத்து உயரும்
உன் அயலவர் சொத்து
ஏன் உன்னை தூங்க விடவில்லை
என்ன உனக்கு பொறாமையா..?

சொல் மனிதா சொல்
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

அழகோவியமாய் உன் மனைவி
அருகில் நிலைத்திருக்க
அரைகுறை ஆடையுடன் அலையும் குமரிகள்
கண்டு ஏன் மனம் தளர்கிறாய் ...?

உன் ஆசை இன்னும் அடங்கவில்லையா ..?
சொல் மனிதா சொல்
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

பிச்சை கேட்டால் திட்டும் நீ
மற்றவன் பின்னே கடனுக்காய் அலைகிறாய்
அவன் திட்டினால் முறைக்கிறாய்
இதற்கு என்ன பெயர் ...?

சொல் மனிதா சொல்
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

முடியும் என்று பிதற்றும் நீ
முடிக்காமல் விட்டு
மற்றவன் முடித்தால்
அவனை ஏன் வஞ்சுகிறாய்
சொல் மனிதா சொல்
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

எனக்கு என்ன லாபம் என்றில்லாமல் நீ
எமக்கு என்ன லாபம் என்று பார்
அன்று புரியும் உனக்கு
இதனால் உனக்கு என்ன லாபம் ..?

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.