புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் ஜனவரி மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---அதிராம்பட்டினம்.ஷேக் அப்துல்லாஹ் உங்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்போட்டி இலக்கம் மாதம் -86 வது (தலைப்பு--- உனக்கென்னலாபம்) 


அமைதியை தேடி வீட்டைத் துறந்தே
ஆங்கே தனிமையில் தவமும் முறையா ?
இமையாய்க் காப்பதில் விலகிப் பறந்தே
இதயம் கல்லாய்ப் போவதே சிறப்பா ?
தேவைகள் தனக்கும் தன்னின் உறவுக்கும்
தீர்ந்திட செயல்படவே பிறக்கும் அமைதி !
தேவையற்றோன் தன்னிலே தெளிவாய் அறிந்திடின்
தேடியே அலைதல் எண்ணமும் தோன்றா !


கூடிவாழ்ந்தும் தெளிவுதந்தும் நடந்துமே வளர்த்தலில்
குழப்பங்கள் இல்லாக் குடிகள் தளிர்க்குமே
ஓடிபோவதில் உலகிலே பிறப்பில் துன்பமே
உணர்ந்தே ஆழ்ந்தே ஆற்றிடின் இன்பமே
உறக்கத்தில் உனையிழக்க ஒன்றேயது உதவியால்
உன்னை உயிராய் இயக்குதே தன்னிலே
துறப்பதே தொடருமாகின் துணையற்றே ஒருமையில்
துவண்டும் மோட்சமாகின் இறையதுக்கும் கசக்குமே !


பூத்திடா மரத்தினால் புன்னியம் உண்டா ?
பூவையரில் புரிதலில் சாந்தியும் மலருமே !
காத்திடா கலைதலில் கருணை இழந்தே
கடவுளை காண்பதும் காரியம் ஆகுமா ?!
உள்ளதின் தன்மைகள் சூழ்ந்துத் தெரிதலில்
உனதின் பிறப்பால் புன்னியம் உண்டாகும்
உள்ளத்தை அறியவே தோற்றம் கொண்டாய்
உனக்கென்ன இலாபம் என்பதில்லைக் காணே !

அதிராம்பட்டினம்.ஷேக் அப்துல்லாஹ் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.