புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் ஜனவரி மாதத்தின் முதலாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவியருவி " பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்-கல்முனை முபாறக் அப்துல் மஜீத் உங்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்முபாறக் அப்துல் மஜீத்




உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிஜனவரி மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -86 வது தலைப்பு--- உனக்கென்ன லாபம்.-06

எனக்குள் நான்
மட்டுமல்ல
உனக்குள் நான்
என்றே இருந்தேன்
இப்போது கேட்கி றாய்
உனக்குள் நான் எங்கே
என ,
தனக்குள் தான் யார்
என்பதை அறியாமல்
உனக்குள் உன்னை
நான்
எப்படித்
தேடுவேன்
உனக்குள் உன்னை
நான்
பார்ப்பதை விட
உனக்குள்
என்னை நான்
காணாத் துடிக்கின்றேன்
எனக்குள் என்னை
காணாமல்
உனக்குள் என்னை
நான்
காணத் துடிப்பதால்
உனக்கு என்ன லாபம்
என
என்னை நீ
கேட்பது
உனக்குள் இருக்கும்
எனக்கு கேட்கிறது
புரிந்து கொள்
இது
லாப நஷ்டம் பார்க்கும்
வர்த்தகம் அல்ல
இரண்டு ஆத்மாக்களின்
இயற்க்கை உணர்வு
கல்முனை முபாறக் அப்துல் மஜீத்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.