புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் பெப்ரவரி மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---கா.ந.கல்யாணசுந்தரம்உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி பெப்ரவரி
மாதம் 2017

போட்டி இலக்கம் மாதம் -87 வது

போட்டிக்கவிதை எண் -19

தலைப்பு-மக்களாட்ச்சியின் மகிமை

சரித்திரச் சான்றாய் உத்திரமேரூர் கல்வெட்டுகள்
சத்தியமாய்ச் சொல்லுகின்றன ...
இத்தரையில் நல்லதோர் ஆட்சிக்கு அன்றே
குடவோலைத் தேர்தல் நடந்ததென்று !
முடிசார்ந்த மன்னராட்சி முடிவுற்றுப்போனதும்
கொடுங்கோலின் கொட்டமும் வீழ்ந்ததிங்கே !
மக்களின் முடிவே மகேசன் முடிவென்று
ஓட்டளிக்கும் மக்களாட்சி மலர்ந்ததிங்கே !

எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கும்
இல்லாமை இல்லாத நிலை அடைவதற்கும்
தன்னிறைவுச் சமுதாயம் திகழ்வதற்கும்
தரணியிலே மக்களாட்சியே மகத்தானது !
சமுதாயக் குரல் கொடுக்கும் நல்மாந்தர்
அமுதினும் இனியர் தலைமை கொள்ளின் !
சுயநலப் போர்வை கொண்டு நாட்டின்
செல்வமத்தைச் சுரண்டுவதால் நசுக்கப்பட்டோம் !

கொடியவரின் கூடாரம் அரசியல் செய்யாது
நாடுகடத்தி நற்செயல் புரிந்திடுவோம் !
வீடும் நாடும் நலம்பெறவே நல்லதொறு
தலைமையைத் தேர்ந்தெடுக்கும் வழி காண்போம் !
அறிவியல் கலாச்சாரம் பண்பாடு மொழியுணர்வு
அனைத்து வகை நலம் சேர்க்க ஒத்துழைப்போம் !
மக்களாட்சி மகிமைதனை நன்குணரும் காலமிது
இக்கணமே ஒன்றாவோம் சமூக நீதி காத்திடவே !

கவினெழி கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு  தடாகம் குடும்பத்தாரின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.