புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் (பெப்ரவரி மாதத்தின்) மூன்றாவது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக்கு "கவின்கலை" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்- கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர் வி.அஜந்தன்...



உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி பெப்ரவரி மாதம் 2017

போட்டி இலக்கம் மாதம் -87 வது

போட்டிக்கவிதை எண் -02

தலைப்பு -வண்ணக்கனவுகள்

நிலவின் ஒளியில்
நிழலின் வெளியில்
நிசப்த இரவின்
நீங்காத நினைவில்
நித்தம் நித்தம் -மொத்தமாய்
எத்தனை கனவுகள் பாரீர்...
விந்தை விடிவால் விழிக்கும் பூவின் 
விடியலில் ஓர் கனவு,
புல்லின் நுனியில் புரளும்
பனிக்கு ஆதவன் கண்ணில்
அகப்படாதது கனவு
சின்னச்சிறுமிக்கு சிங்கார கனவு 
வண்ண நிலவுக்கு வாலிபக்கனவு
சண்டைக்கு சமாதாம் கனவு,
சமாதிகளுக்கு மறுயென்மம் கனவு
யுத்தத்திற்கு இரத்தத்தில் கனவு
மண்ணிற்கு மழைதுளி வீழ்தல் கனவு
விண்ணிற்கு வானவில் 
வருவது கனவு
விதவைக்கு பூவும் பொட்டும் கனவு
உழவனுக்கு விளைச்சல் கனவு
ஏழ்மைக்கோ செல்வம் கனவு...
எத்தனை எத்தனை கனவுகள்-இங்கு
சத்தியம் பெறுகிறது.
எண்ணங்கள் மாறும் போது
கண்ணில் வண்ணக்கனவுகளும்
(வெவ்வேறு) வகைப்படுகிறது...
எனக்கு
ஏது கனவு"""
இன்ப இரவுகளையெல்லாம்
இழுத்துக்கொள்ளும் 
என் கனவுக் கண்கள்
பலிக்காதென அறிந்தும்
பகற்கனவுக்காய்
விழிகளை மூடுகிறது
பைத்தியமாக.
..
வி.அஜந்தன்...

 கவின்கலை வி.அஜந்தன்அவர்களுக்கு  தடாகம் குடும்பத்தாரின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.