புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு டிசம்பர் மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம்பட்டமும்சான்றிதழும் பெறுகின்றார்விநாயகமூர்த்தி ஜீவராசா(கலைஞர்.ஆனந்தத்தில் ஒரு அனல்)


 

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி பெப்ரவரி
மாதம் 2017
போட்டி இலக்கம் மாதம் -87 வது

போட்டிக்கவிதை எண் -27

தலைப்பு--கனவினில் வாழும்அவள் நினைவு..!

அழகான இதழ் கொண்டு
அவள் என் கன்னத்தைக் கொஞ்சும் 
அங்கே அலைந்துதிரியும் வண்டொன்று
அவளைக் கேட்டுக் கெஞ்சும்..!
பகலைத் தொலைத்துவிட்ட இரவில்
பாசங்கள் பொங்கி பரவசம் எழும் 
பார்வைகள் ஒன்றுக்குள் ஒன்றாய்
பற்றியதனால் உடலே வீழ்ந்து அழும்..!
சொட்டு சொட்டாய் என்னை
தொட்டுவிடச் சொன்னது அவளது அங்கம் 
தட்டிவிட்டு என்னை மெல்ல
தடவி நின்றது சொர்க்கத் தங்கம்..!
முட்டி முட்டி மோதியெல்லாம்
முக்குளிப்பில் நின்று போனது மூச்சு
அவள் அள்ளி என்னை கட்டிவிட
ஆவி பொருள் அனைத்துமே போச்சு..!
காற்றின் தேகம் பட்டு
கலைந்து போனது என் தூக்கம்
கண்களில் மெல்லத் தடவியவள்
கைகளைக் காணாத ஏக்கம்..!
நாடித் துடிப்பில் நரம்பெல்லாம்
நர்த்தனங்கள் ஆடும் நாளும்
நாளிகையில் என்னிதயத்தில் என்றும்
அவள் நினைவே வாழும்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணைக் கிராமத்தில் பிறந்து, ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்று, இடைநிலைக் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியப் பாடசாலையிலும், 2015 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலை துறையில் உயர் கல்வியையும் பயின்று, 2010 ஆம் ஆண்டு திருகோணமலை மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விசேட கல்விப் பிரிவின் கீழ் சமுக இசைவுக்கான கல்வியை மாணவர்;களுக்கு வழங்குவதில் ஆய்வு உதவியாரளராவும், 
2013 ஆம் ஆண்டு நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி தற்போது ஓவிய ஆசிரியராக காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றி வருகின்றார் 

 கலைத்துறைத் தொடர்பில் ஓவியம், கவிதை எழுதுதல், அறிவிப்பாளர், மரச்செதுக்கல் மற்றும் சீமெந்து அரைபுடைப்புச் சிற்பங்கள் செய்தல், பாடல்கள் எழுதுதல், வடிவமைத்துறை போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகின்றார் 

கவித்தீபம்.ஆனந்தத்தில் ஒரு அனல் அவர்களுக்கு  தடாகம் குடும்பத்தாரின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.