புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் பெப்ரவரி மாதத்தின் முதலவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவியருவி பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்கவியோகி வேதம்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி பெப்ரவரி
மாதம் 2017

போட்டி இலக்கம் மாதம் -87 

போட்டிக்கவிதை எண் -07

தலைப்பு-- கிளிஜோஸ்யம் பார்க்க வாருங்களேன்!!

(ஈறடித்தாழிசை-)

கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக் கிறுக்(கு) என்பர்;--விஞ்ஞானம் 
வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை இன்று! அது, மூட

நம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே கெஞ்சுகிறேன்! 
கும்பிடுவேன் உம்மைநான்! கூண்டுவைத்துப் பிழைப்பவனைக்

கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம் பாருமய்யா! 
அருமையாய்க் குறிகேட்க அமருகிற வேளையில்தான்
,
'பறவை' அது ஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை! 
குறிசொல்லி முடிந்தபின்தான், கொறிக்கிறது ஒரு- நெல்லை!

எங்கெல்லாம் கிளிக்கூண்டோ அங்கெல்லாம் போம் அய்யா! 
அங்கு போய்ப் பாரும் உமதிர்ஷ்டத்தை; இறைஞ்சுகிறேன்!

பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும் தெரியாமல் 
எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப் போல் மெலிந்திருக்கும் 
பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே போய்ப் பாரும்!

அடிக்கடி போனால், இறை அடியாரே நீர் அன்றோ? 
படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு செய்வதினும்,

பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால் 
சொர்க்கத்தின் இருகதவை ஒரேகையால் திறக்கின்றீர்!!
 

கவியோகியாரைப் பற்றி...


கவியோகி வேதத்தின் கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் விவரம்:-

1)-  நூல்--காயத்ரியின் காதல்..(போட்டியில் முதற்பரிசு பெற்ற குறுங்காவியக் கவியும் பிறவும்)--சொந்தப் பிரசுரம்-ஜூன்1981-இல்

2)-நூல்--எளிய யோகாசன முறைகள்-(சமூகநலனுக்காக பலர் வேண்ட,நூல் ஆக்கப்பட்டது)-Publisher-புத்தகப் பூங்கா-டிஸம்பர் 1983(35000 பிரதிகள் விற்பனையாயின)

3)கவிதை நூல்---வள்ளல் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர்--(this is about Sree kaanchi Mahap periyavaaL-)பப்ளிஷர்- ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயம், சென்னை-41நவம்பர்-2003.

4)-கவியோகி கவிதைகள்..நூல்
Published in Dec2007--by LKM publications, T Nagar, Chennai-17

5)- புதிய ஆராய்ச்சி நூல்--போகமும் யோகமும்-(Essays on Bakthi Literature as to What is Bhoga and what is Yoga)- by LKM publications , Chennai-17 in March 2009

6) தியானம் பற்றிய ஆராய்ச்சி நூல்--தியானமும் யோகாசனமும்-- (Essays on Meditation and Asanas) Published for doing good to Whole HUmanity, by LKM publication, Chennai-17...in June 2010

இவரது இலக்கியச் சேவைகள் + பங்களிப்புகள்;-


1) 1966 இலிருந்து இதுவரை தமிழ் இலக்கிய உலகில் 600க்கும் மேற்பட்ட கவியரங்கம்,பட்டிமன்றம்,தனிப்பேச்சுக்கள் நிகழ்த்தியுள்ளார் இவர்.
.
2)- மேலும் இதுவரை கல்கி, ஆநந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் 250க்கும் மேல் இவரது கவிதைகள்+ பாரதி பற்றிய பற்பல கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
.
3)-சமீபத்தில் 2008இல்(ஆகஸ்ட்) கானடாவில்(Massachussets)- ‘சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்’என்னும் தலைப்பில் 1 மணி நேரத்திற்கும் மேல் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்
..
4)-சிங்கப்பூரில் பிப்ரவரி 2008-இல் சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும் பற்றி ஒன்றரை மணி நேரம் பேச்சு நிகழ்த்தியுள்ளார்.

5)-இவை தவிர 1996 இலிருந்து(ரிசர்வ் வங்கியில் ஓய்வு பெற்றபின்)தொடர்ச்சியாக இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார். சமுதாயத்தில் அனைவருமே தான் யார்? உலகிற்கு என்ன காரணத்திற்காகப் பிறப்பு எடுத்தோம் என்பதை ஒவ்வொருவரையும் உணரச்செய்வதற்காகவே தீவிர மனப்பயிற்சி கொடுத்துவருகின்றேன் என்பார் இந்த பூரண யோகியார். ..

யோகியார் என்னும் பெயரில் இதுவரை பற்பல கவிதைகள், யோகா ஆலோசனைகளை தமிழ் இணையங்களில் எழுதிவரும் இவரது சமுதாய சேவைகளைஎவ்வளவு பாராட்டினாலும் தகும்

கவியோகி வேதத்திற்கு தடாகம் குடும்பத்தாரின் மனம் நிறைவான வாழ்த்துக்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.