புதியவை

50 வருட சாதனைப் பெண் கலாபூசணம்ஜனாபாமுபீதா உஸ்மான் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஊடகவியலாளரான முபிதா உஸ்மான் தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

முதியோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களம் நடத்திய எழுத்தாக்க போட்டியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் கலாபூஷணம் முபீதா உஸ்மான், அம்பாறை மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு– கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற மாகாண கலை இலக்கிய பெருவிழாவின் போதே இவர் முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் பிரச்சார உதவியாளராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

 முழுநேர ஊடக சேவையில் இருந்து ஒதுங்கிக் கொண்டாலும்  அம்பாறை மாவட்டத்தில் கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றார்.

குறிப்பாக சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து இஸ்லாமிக் ரிலீப் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் இணைந்து அதன் இணைப்பாளராக கடமையாற்றிய இவர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்ட்ட மாவட்ட மக்களுக்கு இன மத பிரதேச வேறுபாடின்றி அவர்களது வாழ்வாதார மற்றும் வாழ்விடங்களுக்காக பல வழிகளிலும் பணிபுரிந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராவார்.

 முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றிய இவர் சமூகங்களிடேயே நல்லுறவு, ஐக்கியம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு அளப்பெரிய சேவையாற்றியுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் விடுதி மேற்பார்வையாளராகவும் கடமை வகித்துள்ளார்.

 50வருடங்களாக   கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார்.

இத்தகைய பணிகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாகவே கிழக்கு மாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முபிதா உஸ்மான் அவர்களுக்கு  முதலமைச்சர் விருதுவழங்கி கொளரவிக்கப்பட்டது 

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இவர் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசாங்க கலாசார அமைச்சின் கலாபூசணம் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

அத்துடன் இவர் கடந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தின வைபவத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்ணாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலை சிறந்த பெண்ணாகவும் தெரிவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்முனை கல்வி கலாபீடமான  BCAS  campus பணிபுரிந்து வருகின்றார்

அன்பான இதயமும் பாசமான உள்ளமும் கொண்ட சகோதரி மேலும் மேலும் நல்ல பல அரிதான  சேவைகளை செய்வதற்கு அல்லாஹ் நீண்ட ஆயூளை வரமாய் கொடுப்பானாக!No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.