புதியவை

வெற்றிப்பாதை. !கவிஞர். கோவிந்தராஜன் பாலு.உழைப்பின் உயர்வே வெற்றியாகும்.!
உணர்ந்தால் நீயும் உயர்வடைவாய்.!
பிழைக்கும் வழியும் தெரியாமல்
பிறரைப் பழித்துப் பேசாதே.!
தழைத்துச் சிறக்க வேண்டுமெனில்
தளரா துழைக்கக் கற்றிடுவாய்.!
குழையப் பேசும் மனிதரிடம்
குறையை என்றும் சொல்லாதே.!
வெற்றிப் பெற்ற மனிதரெல்லாம்
வியர்வை சிந்திப் பெற்றார்கள்.!
கற்றக் கல்விப் பயனாலே
கனியாய்ப் பழகித் தெளிந்தார்கள்.!
சுற்றம் போற்றி வாழ்ந்திட்டால்
சூழும் எழுச்சிப் பெருகிடுமே.!
உற்றச் சொல்லால் இணைத்தடவே.
உவந்துப் பேசி மகிழ்வீரே.!
கல்லும் முள்ளும் இருந்தாலும்
கடந்துப் போக நினைத்திடுக.!
வெல்லும் குறிக்கோள் ஒன்றாக
விதைப்பீர் நெஞ்சில் இனிதாக!
புல்லும் கூர்மை வாளாகும்.
பொறுமை என்றும் பலமாகும். !
நெல்லும் விளைந்தேத் தலைசாயும்
நெஞ்சம் கொண்டேப் பணிவீரே.!
திட்டம் போட்டு வாழ்ந்திட்டால்
தீர்வு எளிதாய்க் கிடைத்திடுமே.!
பட்டம் வானில் பறப்பதுபோல்
பாரில் புகழைப் பெற்றிடவே !
வட்டம் போட்டு வாழ்ந்திட்டால்
வளமாய் நலமாய் வாழ்ந்திடலாம் !
சட்டம் மனதில் போட்டிடுக.
சாதனைப் படைத்து மகிழ்ந்திடவே.!
கவிஞர். கோவிந்தராஜன் பாலு.
7 / 126 கவுண்டர் தெரு, சுந்தரப்பெருமாள்கோவில்,
தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.