புதியவை

தடாகத்திற்கு வந்த அஜந்தன்வேண்டுதல் கடிதம்

                   
அன்பான உறவுகளுக்கு மனம் நிறைவான ண்டமிழ் வந்தனம்

ஒரு தாயிடம் தான் பிள்ளைகள் தமது ஆசைகளை .எதிர்பார்ப்புக்களை சொல்லி விருப்பங்களை ஆவலோடு எதிர் பார்த்து காத்து இருப்பார்கள்
அந்த ஓர் எதிர்பார்ப்பை என்னிடம் மகன் அஜன்தன் ( Ajan Than)இனம் கடந்து மதம் கடந்து மொழி கடந்து கலை தாயாய் மதித்து என்னிடம் எதிர் பார்க்கின்றார் 

உண்மையில் அவரது வேண்டுதலை மன நிறைவோடு ஏற்று மிகவும் சந்தோஷம் அடைகின்றேன்

அவரது ஆசையை விருப்பத்தை நான் இன்று மன நிறைவோடு நிறைவேற்றுகின்றேன் நன்றி மகன் நன்றி
இதோ எனக்கு வந்த அஜன்தன்வேண்டுதல் கடிதம் 
..............................................................
பணிவான வணக்கம் அம்மா.
ஒரு சிறிய தகவலையும். எம் ஆவலையும் தடாகத்தின் வளர்ச்சிக்காக கூற கடமைப்பட்டுள்ளேன்.
இலங்கையை பொறுத்தவரை கிழக்கிழங்கைக்கு விடிவெள்ளியாகவும் முத்தமிழ் வித்தகராகவும் திகழ்ந்தவர் விபுலானந்த அடிகளாவாராவார்.
இவரின் ஜனன தினம்பெப்ரவரி மாதம் நினைவிருக்கிறதா தங்களிற்கு
விபுலானந்தர் அவர்களிற்கு நன்றியும் மரியாதையும் செய்யும் முகமாக நாம்பெப்ரவரி மாதம் நடைபெற உள்ள
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியினை அவருக்காக அர்பணிக்க விரும்புகின்றோம்.
அதனால் முத்தமிழ் வித்தகரான அடிகளாரின் பெருைமயையும் கிழக்கு மாகாணத்தின் பெருமையையும் பறை சாற்ற பெப்ரவரி மாத உலகம் தழுவிய கவிதைப்போட்டியை அடிகளார் சம்பந்தமாக தலைப்பைக் கொடுங்கள்.
உலகம் பூராக அடிகளாரின் பெருமையை பறை சாற்ற இது சிறந்த வழி.
இது ஒரு வித்தியாசமான போட்டியாகவும் சிறப்பு போட்டியாகவும் அமையட்டும்.
அம்மா தயவுகூர்ந்து என் கருத்திற்கான பதில்கருத்தை பதிவிடுங்கள்.
நான் தவறான கருத்தை இட்டிருந்தால் தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்.
என்றுமே ஒரே மாதிரியான தலைப்பைக் கொடுத்து கவிஞர்களை ஊக்குவிப்பதோடுமட்டுமல்லாது சமகாலத்து நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தலைப்பைக்கொடுத்தல் நன்றே.
அந்த சிந்தனையாலே நான் இவ்வாறு யோசித்தேன் அம்மா.
நான் வயதில் சிறியவன் ஆனால் கவிதைகளை வாசிப்பதிலும் எழுதுவதிலும் மிகப் பிரியன்
தங்கள் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்று சான்றிதழ்பெற வேண்டும் என்பது எனது பேரவா அம்மா.
நீங்கள் உண்மையில் நியாயப்படி தீர்வை வழங்குகின்றீர்கள் அதற்கு என் வாழ்த்துக்கள்
..
ஆனால் உலகம் தழுவிய கவிதைகளில் கலந்துகொள்ள எனக்கு ஏதேனும் தடைகள் வந்துவிடும்.
இருந்தும் போனமுறை "உன்னுள் நீ " இந்த தலைப்பிற்கு நான் கவிதை எழுதி அனுப்பினேன் அம்மா அது அந்த தடவை தெரிவு செய்யப்படவில்லை.எனேன்று தெரியாது
.
தங்கள் கூறிய நியதிப்படி தான் அனுப்பினேன் என் கவிதை தங்களிற்கு வந்தடையவில்லைப்போலும்
.
அம்மா நான் தொடர்ந்தும் எழுதுவேன் என்றாவது ஒரு நாள் அந்த பெறுமதிமிக்க சான்றிதழை நானும் பெறுவேன் என்ற நம்பிக்கை உண்டு தாயே.
"முயற்ச்சி திருவினையாக்கும் அல்லவா"
அம்மா .நம் நாட்டு தமிழ்ப்பெரியேரின் பெருமையை பறைசாற்றுவது நமது கடமை இத்தலைப்பு வெறுமனயே என்னுடைய விருப்பம் மட்டுமல்ல தடாகத்தில் நண்பர்களாய் உள்ள பலரிடம் நான் இதைப்பற்றி பேசினேன் அவர்கள் மிகுந்த ஆதரவை நல்கினார்கள் பலர் விருப்பமும் இதுவே.
அதனால் உங்களிடம் கூறவேண்டும் என முயற்ச்சித்தேன்.
நான் சிறுவன் தனியாக ஓர் தீர்மானம் எடுப்பது தவறு அதுதான் பலரிடம் கலந்துரையாடிய பின் அவர்களின் விருப்பிற்கிணங்கவும் இத்தகவலை தங்களிடம் எடுத்துக்கூறினேன் அம்மா
அம்மா போட்டியில் வெற்றியீட்டியோருக்காக பணப்ரிசை தயவுசெய்து வழங்காதீர்கள்.
பணப்பரிசுக்குப் பதிலாக சான்றிதழ்ளோட ஏதேனும்
நினைவுப்பரிசினைவழங்குங்கள்.
கவிதைப்போட்டியில் வெற்றியீட்டியதற்காக ஒரு வெற்றிக்கிண்ணத்தை கொடுங்கள்.
உண்மையிலே ஒரு வளரும் கவிஞனுக்கு ஊக்கமளிக்க்கூடியது வெற்றியை பெற்றமைக்கான நினைவுகளே.
நீங்க நடத்தப்போகும் விழாவில் அவர்களை கௌரவித்து வெற்றிக்கிண்ணத்தையோ அல்லது நினைவுப்பரிசில்களையோ கொடுங்கள் நிச்சயமாக அது மதிப்பையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்
பணம் இன்று வரும் நாளை இருக்காது ஆனால் பாராட்டு வெற்றி அது புகழாய் எம்மை தொடர்ந்து வரும்
அதற்கு வெற்றிபெற்றமைக்காக நினைவுப்பரிசுகளை வழங்குவதிலே பெருமிதமடைகிறோம்
நாம் எல்லோரும்.பணத்தால் வருங்காலத்தில் தமிழ் பாழடைய கூடும்.
"பணத்திற்காய் தமிழ்" எனும் நிலையும் வரலாமல்லவா?
.
சிலர் போட்டிகளை நடத்தி பணத்தை பரிசாக வழங்குகிறார்கள்
என்னைப்பொறுத்தவரை இது கீழ்த்தனமான சிந்தனை அல்லவா தாயே,
அந்த பணப்பரிசுக்கு ஏற்றவாறு வெற்றிக்கிண்ணம் அல்லது பெறுமதி மிக்க புத்தகங்களை பரிசாய் வழங்கலாம்
அனுசரனை கிடைத்தால் இனிவரும் போட்டிகளில் இதை முயற்ச்சியுங்கள் தாயே
தடாகம் சிறப்பாய் வளரும் தடாகத்தின் வளர்ச்சியே எமக்கு மகிழ்ச்சி.
நன்றி -அன்பு மகன்
Ajan Than

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.