புதியவை

பெண்மைகே.என். இராமகிருஷ்ணன், பி.காம், பி.லிட்.(தமிழ்)


மென்மை உடலியலில் பெண்மை மிளிர்கிறது
தன்மையில் தளராத தாயன்பு ஒளிர்கிறது
அன்பின் ஊற்று வற்றாத நதியாக வளர்கிறது
அன்றும் இன்றும் என்றும் பெண்மை பேரெழிலே
பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்ற கேள்வி
கண்ணினும் இனிய பெண்மையின் அருமையே
எண்ணிலும் எழுத்திலும் அடங்கா அன்புருவாய்
விண்ணின் விடிவெள்ளியாய் பெண்களன்றோ
பத்து மாதம் சுமக்கும் பெண்ணின் உடல் வலிகள்
பித்துப் பிடிக்கும் நிலையிலும் பெண்மை மிளிருமே
வித்து ஒன்று வெளியுலகு காண விரும்பும் மனமே
முத்துச் சேய் முகம் பார்த்ததும் மலரும் முகமே.
தன் உதிரத்தைப் பாலாய் தந்து பசி தீர்க்கும் அன்பு
தன் சேய்க்காக உறக்கம் தொலைக்கும் துன்பம்
தன் சேய் படிப்படியாய் வளர அடையும் இன்பம்
தன் வசதிகள் குறைத்து சேய் வளரத் துடிக்குமே
கணவனிடம் காட்டும் தன்னலமற்ற தனியன்பு
கிணற்றுத் தவளையாய் இறங்கிப் போகும் பண்பு
குணக் குன்றாய் விட்டுக் கொடுக்கும் மாண்பு
மணக்கும் மல்லிகையாய் பெண்மை அழகுதான்.


கே.என். இராமகிருஷ்ணன், பி.காம், பி.லிட்.(தமிழ்)
,

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.