புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2017ல் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கவின்கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிதாயினி பாயிஸா நௌபல்(கவி நுட்பம் )உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி,  2017
போட்டி -87 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-13
தலைப்பு- முத்தமிழ் வித்தகர்விபுலானந்தர்
"உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது"
சொல்லி வைத்த அறிவூற்று
சுவாமி விபுலா னந்தர்!
காரேறு மூதூ ரில்
கருக்கொண்ட கார் மேகம்
பாரெல்லாம் போற்று கின்ற
பண்புநிறை மா மனிதர் !
உலகில் தமிழ் வளர்க்க
உதித்த முதல் பேராசான்
நிலவாய் ஒளி தந்து
நீங்கா இடம் பெற்றார்
யாழ்நூலில் இசை அமுதம்
யாத்து வைத்த மா கலைஞர்
பாரதியை நாடறியப்
பறைசாற்றிப் போற்றி யவர்!
சாதித் திமிரோடு
சைவத்தைப் பார்த்தவரை
மோதிக் கருத்துக்கள்
முன்வைத்த சுவாமி யவர்!
விஞ்ஞானப் பட்டங்கள்
வென்றிருந்த மேதாவி
மெய்ஞ்ஞானப் பேரொளியாய்
மிளிர்ந்திட் முழு நிலவு!
அனைவருக்கும் கல்வியினை
அளிப்பதுவே கடமை யென
அனாதைகளை ஏழைகளை
அரவணைத்த கலைக் கூடம்!
"கங்கையிலே ஓலை "விட்டுக்
காட்டியநல் லருட் சோதி,
சங்கைமிகு சுவாமி, அவர்
சதா வாழ்வார் நினைவினிலே!

பாயிஸா நௌபல்(கவி நுட்பம்) 

ஆலிம் வீதி
மீராவோடை -4
ஓட்டமாவடி
மட்டக்களப்பு-
இலங்கை
தடாகத்தின் பாராட்டுக்கள் பாயிஸா நௌபல்(கவி நுட்பம்) அவர்களுக்கு 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.