புதியவை

நிலைத்துவிட்டாய் கலைமகளே ! ( எம். ஜெயராமசர்மா தம்பதியர் ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )      வசந்தத்தில் உனைப்பார்த்தோம்
      வகைவகையாய் பலகேட்டோம்
      வாசமிகு தமிழ்மலராய்
      மணம்பரப்பி நீவந்தாய்
      பாசமுடன் பைந்தமிழை
      பலநிலையில் எடுத்துச்சென்றாய்
      நேசமுடன் எம்நெஞ்சில்
      நிலைத்துவிட்டாய் கலைமகளே !

      இசுலாமியப் பெண்ணே
      இன்பத்தமிழ் அணைத்தவளே
      அரபுதனைக் கற்றாலும்
      அரவணைத்தாய் அருந்தமிழை
      இளம்வயதில் பெருமைகளை
       இருப்பாக்கிக் கொண்டவளே
       இதயதால் வாழ்த்துகிறோம்
       என்றும்நீ கலைமகளே !

       புரட்சிக்கவி பாரதியும்
       புதுமைப்பெண்ணைப் படைத்திட்டான்
       அவ்வழியில் நீயுமம்மா
       அருமைப்பெண்ணாய் வந்தமைந்தாய்
       உன்னுடைய சாதனைகள்
       உளமிருத்தி வைத்துவிட்டோம்
       மண்மீது பெண்களுக்குள்
       மாமலையாய் உயர்ந்துவிட்டாய் !

      உன்பார்வை பட்டதனால்
      உவகையிலே மிதக்கின்றோம்
      உளமிருந்து வாழ்த்துக்களை
      உனக்கீந்து மகிழ்கின்றோம்
      இன்னும்நீ பலசெய்வாய்
      எல்லோரும் வாழ்த்துரைப்பர்
      கண்ணான கலைமகளே
      காலமெலாம் வாழியநீ !   

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.