புதியவை

கந்தப்பெருமானே ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )
      கலியுகத்தின் தெய்வமே - கந்தப்பெருமானே
      நிலைபெறவே வேண்டுறேன் - கந்தப்பெருமானே 

      பவவினைகள் போக்கிடுவாய் - கந்தப்பெருமானே
      பாவிகளைக் காத்திடுவாய்      - கந்தப்பெருமானே 

     முத்தமிழாய் முகிழ்த்தவனே - கந்தப்பெருமானே
     சொத்தெனவே நிறைந்தவனே - கந்தப்பெருமானே
     சத்தியமாய் உள்ளவனே           -  கந்தப்பெருமானே
      சகலசெல்வம் ஆகியுள்ளாய்   -  கந்தப்பெருமானே 

     நித்தமுனைப்     பாடிநிற்க        -   கந்தப்பெருமானே
     நினதருளைத் தந்திடுவாய்         -   கந்தப்பெருமானே
     அத்தனையும் உன்னிடத்தில்      -  கந்தப்பெருமானே
     அடைக்கலமாய் அளித்திடுவேன்  -  கந்தப்பெருமானே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.