புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஜூலை மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்


         


முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் 

உலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப் போட்டி ஜூலை மாதம் 2017
போட்டி -91வது மாதம்
போட்டிக்கவிதை எண் -01
தலைப்பு :- காலம்
காலம் -- தரவு கொச்சகக் கலிப்பா -- மரபு கவிதை
காலத்தை வென்றிடவும் காரியங்கள் செய்திடவும்
ஞாலத்தில் நன்னெறிகள் ஞாயிற்றாய் ஒளிர்ந்திடவும்
பாலமாக என்றென்றும் பந்தமுடன் காலந்தான்
சீலமாக நிலைபெறுமே சிறந்தோங்கி வாழ்ந்திடவே !
காலையிலே எழுந்தவுடன் கருத்தோங்க படித்திடலாம்
சாலைதோறும் இக்கருத்தை சாற்றிடலாம் எல்லோர்க்கும் .
சோலைதனில் நின்றாலாலே சொர்க்கத்தைக் கண்டிடலாம் .
மாலையிலே மனங்குளிர மறக்காதீர் விளையாட .!!
நேரத்தைச் சீராக நேர்படவே செலவழித்தால்
வாரத்தை எதிர்நோக்கும் வாட்டங்கள் நீங்கிடுமே .
பாரமாக காலத்தைப் பதிக்காதீர் மனத்துள்ளே !
ஓரமாக நின்றிருத்தல் ஒருநாளும் கூடாதே !
நல்லனவே எண்ணங்கள் நன்மையினைச் செய்திடுமே
அல்லனவாய் எண்ணங்கள் அகற்றிவிடும் நல்வாழ்வை .
பல்லோர்முன் தலைநிமிர பந்தமுமே காலந்தான் !
வல்லோராய் வாழ்வதற்கே வகுத்திடுமே நற்காலம் !
கண்ணாகக் காலத்தைக் காத்திடலும் வேண்டுமென்பேன்
வண்ணமுற வளம்யாவும் வந்திடுமே காலத்தால் .
மண்மீதில் மானிடரும் மகத்துவமாம் காலமதைப்
பண்பெனவே நினைத்தென்றும் பரவசமாய் வாழியவே !!
பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந் மலிக்கா ஃபாரூக்

உலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப்
போட்டி ஜூலை மாதம் 2017
போட்டி -91வது மாதம்
போட்டிக்கவிதை எண் -16
தலைப்பு :- காலம்
அண்டப் பெருவெளியை அடக்கியாளும் நாயனே!
காலமும் நேரமும் நீயென
கதியாய் இருக்கிறேன்..
காலைமுதல் மாலைவரை
உச்சிமுதல் பாதம்வரை
உன்செயலே உன்செயலே
இதிலெங்க மற்றவைகள்
உட்புக முடியும் எம்திருவருளே!
சாத்தானிய தீங்குகள்
தீண்டிடும் பொழுதெல்லாம்
சாவுகள் சுகவீனங்கள்
நடந்தேறிடும் நேரமெல்லாம்
துஷ்டநேரம் கஷ்டகாலம்_ என்று
தூற்றிடும் மனங்கள்யாவும்
அறியவில்லையோ அருளாளனே
அகிலம்யாவும் சுழலும்
காலமும் நேரமும் நீயே நீயேவென!
நல்லகாலம் கெட்டகாலம் என்பதே(தா)து?
இந்நொடி எனக்கு நடக்கும் கெடுதியின்போது அந்நொடியே
பிறர்ட்கு நலவு நடக்க
அந்நேரகாலம் நலவா? இழவா?
ஒற்றைநாளில் ஒரேசமயத்தில்
நடந்தேறிடும் நன்மைதீமையாவும்
அன்றோ என்ன காலம் என்னநேரம்?
காலத்தை குறைகூறி
தன்காலநேரத்தை வீணடித்து
நிலையை தானிடித்து
நிலையிட்டியதாய் பழிசொல்லும்
வழிமுள்ளை வழிபோக்கில் தான்குத்தி
முள்குத்திவிட்டதெனக்கூறும்
முட்டா மேன்மக்களுக்கெங்கே
காலம் கண்போன்றது
கிடுகிடுவென ஓடும் நேரம்
கடந்தால் கிட்டா பொக்கிஷமென கணபொழுதேனும் சிந்திக்கப்போகிறது..
காலம் கடந்த ஞானம்
கண்கெட்டபின்னே கிட்டும் சூன்யம்...
கை நழுவிப்போகும் காலம்
கிட்டியும் எட்டிடயியலா சுவனம்..


மலிக்கா ஃபாரூக்

மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்த  ஷல்மா ஷாஜஹான் வாழைச்சேனை

போட்டி ஜூலை மாதம் 2017
போட்டி -91வது மாதம்
போட்டிக்கவிதை எண் -07
தலைப்பு :- காலம்
முத்தாய் மூன்று காலம் தானே
நம் சொத்தாய் மலரும் அது
சீர் வகுத்து பாகு படுத்தியது
வேற்றுமை அன்றி பல ஒற்றுமை
வாழ்வின் அர்த்தம் அதன் வரவு
இறப்பின் உயர்வு நயம் தந்து
முற்காலம் அது நம் தோன்றல்
பொற்காலம் நம் நெறி முறையே
இலையுதிர் காலம் அதன் வரண்
கோடை காலம் அதன் புகழ்ச்சி
மாரிக்காலம் மனித இன குளிர்ச்சி
கலியுக காலம் அதன் நாசம்
ஒழுக ஒழுக நம் புகழாரம்
தருமே நம் புனித காலமே
வாழும் காலம் முதல் வரவே
இறக்கும் காலம் கை கூடியே
சங்ககாலம் சரித்திரம் தரவே
சங்கீதம் நிறைந்த குயில்கள்
கூவி அழைக்குமே நாளும்
வசந்தகாலம் என்று தானே
இல் வாழ்வை செழுமை ஆக்கி
நல் ஒழுக்க கால மாற்றம்
நாம் பெற்று வாழவே நமக்கு
வகுத்த வழி என்று வாழ்வோம்
வாழும் காலம் கை கூடும்
கூடு மட்டும் தேர் வலம்
சோகம் வந்து பாரம் தாங்கி
காலம் கடந்து மகிழ்வு பெற.
ஷல்மா ஷாஜஹான் வாழைச்சேனை
 இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த
ஆர்.இராஜகோபால்.கவிநெஞ்சன்

உலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப்
போட்டி ஜூலை மாதம் 2017
போட்டி -91வது மாதம்
போட்டிக்கவிதை எண் -18
தலைப்பு :- காலம்
காலம் என்பது ஞானம் கொள்வது
கடல்போல் பெரிது கட்டினில் அடங்கா
கணித்துப் பார்த்து துணிவாய் கொண்டால்
இனிக்கும் என்றும் எண்ணங்கள் எல்லாம்
முப்பெருங்காலம் இப்பெரும் புவியில்
முன்னது, நிகழ்வது,பின்னது என்று
பிரித்தே பார்த்து கருத்தாய் வாழ்வர்
நேற்று நடந்ததும் இன்று நிகழ்வதும்
நெஞ்சம் நிறுத்தி தன்னிலை உணர்வார்
நாளை நடப்பதை நயமாய் காண
முயன்றும் பார்ப்பார் முடியாமல் விழிப்பார்
முதல்வன் ஒருவன் இருப்பதை எண்ணி
அவனின் பாதம் அழகாய் பணிவார்
ஒவ்வொரு செயலும் புரிந்திட காலம்
இளவேனில் என்றும் முதுவேனில் என்றும்
பிரித்துப் பகுத்து புவியினில் வாழ்வார்
காலம் உருண்டு கடகட ஓட
இன்பமும் துன்பமும் இடையிடை வருமே
காலம் கடந்து மாறிடும் நிலையில்
ஞானம் கொண்டு மாந்தரும் மலர்வர்

ஆர்.இராஜகோபால்.கவிநெஞ்சன்கவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
=============================================================================
நாம் கொடுக்கின்ற பட்டம் பற்றி  பலரதுக்கேள்விக்கான  பதில் 

இங்கு தருகின்றோம் 


கவின் = எழில்/ அழகு/ நயம்/ கவர்ச்சி
கவின் கலை என்றால் அழகான கலை. 
கவின் எழில் என்றால், நயமான எழில் அல்லது கவர்கின்ற எழில் என்ற பொருள்
===========================================================================


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.