புதியவை

என்னுள் வாழும் என் சகோதரி பிரோஸா- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கல்முனை

உன் ...
இதயத்தில் பொங்கும்
சோக கங்கைக்கு
ஆறுதலாய் ...,
அணைபோட விரும்புகிறேன்
கவிதை மூலம்
உங்கள் துயர் படித்தேன் !புரிந்தேன் ...!


உன் சோகத்திற்கு
சுக ராகம் பாட
என்னால் முடியவில்லை 
.


சகோதரி
நாம்
வாழப் பிறந்தவர்கள் தான் ,
ஆழப்பிறந்தவர்கள் தான் ,
ஆனால் ,
மாண்டு போகவும் வேண்டியர்வர்கள் ..,
இப் பிரபஞ்சத்தில்
நாம் காண்பதெல்லாம்
கானல் நீர் ..!


தாயோ ..,தந்தையோ ...,
அண்ணன் ...தம்பியோ 
நீ யோ .,.நானோ ...,

மரணத்தையும் ..
இரனத்தையும் ..,
எதிர்பார்க்க வேண்டியவர்களாகவே
படைக்கப்பட்டோம் ...!

ஆனால் ,
இரணத்தை விரும்பும்
நம் இதயங்கள்
மரணத்தைக் கண்டு
மனம் நொந்து கொள்வது முறையா ...?

சகோதரி ..,பிரோஸா
உன்  உயிர் மகனுக்காக
நீ விடும்
கண்ணீர் துளிகளால்
மகன் முஹம்மட் 
மீண்டும் வரப்  போவதில்லை

உலகக் கொடியிலே
எத்தனையோ தொப்புள் கொடிகள்
மலர்ந்தன ...சரிந்தன
 ...

சகோதரி
எம் முன்னோர் வழிகளை
அவர்களை நினைத்துப் பார் 

...........................................

இப்போது
உன்சோகச்சுமை
சொல்லிக் கொள்ளாமல்
விடைபெற்றுக் கொள்ளும் 


சகோதரி
இனிப்பு ஒரு வகை ருசிப்பென்றால்
கசப்பு ஒரு வகை ருசிப்புத்தான்
இதில் வித்தியாசம் காண்பதை
மடமையாகநினைத்துக் கொள்...


இனிப்பைக் கண்டு ஆ ...யென்பதும்
கசப்பைக் கண்டு சீ ...யென்பதும்
நம் உணரவலைகளில்
தத்தளிப்பதனாலே தான் ....!


பாரம் சுமந்த மனமாக ...,
ஈரம் நிறைந்த விழியாக ...,
தூரம் நின்று தவிக்காமல்
நிலையான இறைவனை
நினைத்துக் கொள்ளு...!
கவலை அனைத்தும்
மறைந்து விடும் 

ம் ...ம்......
கண்ணீரைத் துடைத்துக் கொள் ....!
மனதை பொறுமையாக்கிக் கொள..

வல்ல நாயன் அல்லாஹ் 
ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் 
உயரிய சுவர்க்கத்தை வரமாய் கொடுக்க 
நானும் ஓர் தாயாய் தினமும் 
பிராத்தனை செய்கின்றேன் 


 உங்கள்  சகோதரி 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கல்முனை 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.