புதியவை

தடாகத்தின் தாமரை வேதா. இலங்காதிலகம். டென்மார்க்


.
.
தலைப்பு :- நன்றியுணர்வு
குன்றென மனிதனை உயர்த்திக் காட்டும்
நன்றியுணர்வு மனிதம் வென்றிடச் செய்யும்.
நன்றியுணர்வால் அநியாயத்திற்குத் துணையானான் கர்ணன்.
வென்றிட முடியாத நிலையானது அது.
மனித சரித்திரத்தில் கலாச்சாரங்களில் மதிக்கப் படுவது
புனிதமான மனநலத்தினை வளர்க்கும் நன்றியுணர்வு.
மனித உறவையுருவாக்கி உறுதிப்படுத்தும் செல்வாக்குடைத்து
மனித நெருக்கத்தின் பிணைப்பு நன்றியுணர்வு.

சிறந்த ஆன்மீகப் பயிற்சியாம் நன்றியுணர்வால்
பிறக்கும் மகிழ்வலைகள் இதயத்திற்கு ஒளியூட்டும்.
சிறக்குமன்பால் நன்றி மகிழ்வு நல்லிணக்கமுருவாகும்.
திறக்குமொரு நல்ல குமுகாய வாழ்வு.
பெற்றவர்கள் உறவுகள் நட்புகளிணைவில் நம்மை
வெற்றியுற வைப்பது நன்றியெனும் உணர்வே
குற்றமின்றி திருவள்ளுவரும் சிறப்புற விரித்துள்ளார்.
கற்றுயரும் போட்டிகளிற்கும் சிறப்புடை நன்றிகள்.

நன்றியுணர்வு பலர் மறந்த சொத்தாகிறது இன்று.
இன்றும் தைப்பொங்கல் நன்றியுணர்விற்கே உரியது.
அன்றன்று பெறுமுதவி அனுபவத்திற்கு உணர்வுடைய
உள்ளத்தின் பகிர்வே இனிய நன்றியுணர்வு.
குறைகூறும் பழக்கத்தை நன்றியுணர்வு கொன்றிடும்.
கன்றின மனம் இலேசாகும் இன்றியமையாது
நன்றி கூறுங்கள் அற்பதங்களுங்களை வெல்லும்!
நன்றியுணர்வோடு பாராட்டுதலும் நம்மை உயர்த்தும்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.