புதியவை

எரி்தணல் ஆனந்தி ராமகிருஷ்ணன்.




உயிர் பிரியும் இசை
எங்கோ தூரத்தில் காற்றுக்குள்
சாட்சியாகி உறைந்து கிடக்கிறது!

இறகுகள் முறிந்தப்படி சரிந்திருக்கிறேன்.
என் நிகழ்கணங்கள்
கசியும் துரோகங்களில் குவிந்திருக்கிறது!

உக்கிரமாய் நிலவொளி
சொல்லறுத்து ஆவேசம் பொங்கும்
அறியாமைக்குள் அசைவற்று இருக்கிறது!

இன்னும் இருகுகிறது
கானல்வெளி துக்கத்தின் வதைக்கூடங்களாய்
விசும்பல் உதிர்கிறது!

ஒரு துளி நினைவு
வற்றாத  வலியை புதைக்க
எரிதணலாய் எரிந்துகொண்டிருக்கிறது
இன்னும் இவ்விரவு
எஞ்சியிருக்கிறது!

-ஆனந்தி ராமகிருஷ்ணன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.