புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு செப்டம்பர் மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்
முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த ஷேக் அப்துல்லாஹ் 
அதிராம்பட்டினம்.

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017
போட்டி -93வது மாதம்
போட்டிக்கவிதை எண் 10
தலைப்பு- மனிதர்களுக்கு மட்டும்
உண்டாகும் முன்னரே இல்லை !
உண்டாக்கித் தெரியுமந்த இல்லை !
இல்லாமை இருப்பாகி எல்லாமாய்
எதுகையற்றே நிற்குமந்த அரூபம் !
உறக்கத்தில் நீ இல்லை !
இல்லாத உனக்கு எதுவுமே இல்லை !
இருப்பென்ற உன்னிலைக்கு காண்பதெல்லாம் உண்டு
இல்லையில் எண்ணிக்கை இல்லை !
சுட்டலாமதை ஒன்று !
இல்லை என்ற ஒன்று !
இல்லாததுவும் இருப்பதுவும்
இருப்பதற்குத்தான் உண்டு !
இல்லாமைக்கு இல்லைதான் !
கனவில் காண்பதில்
உன்னை, அவனை, இவனை...
காண்பது யாரு ???
இல்லாமையா ?!
விழிப்பில்... கண்டது இல்லையே !
எத்திவிட்டு இல்லாமை... இல்லாமையானதோ !...
நினைவு இழத்தல் உறக்கம் !
அதில் இருந்த, உள்ள இல்லாமை
விழிப்பில் இருப்பாகி இயங்குகிறதோ !...
உருவங்களாய்க் காண்பதற்கு
பல்கிப் பெருகி
பலவாக நின்றாலும்
அவைகள் அரூப வொன்றின் உருவென்றால்...
உண்மையாகாதா ?!
உறங்கும் மனம் விழிப்பதுபோல
இல்லாமை உள்ளமையாக அணுக்களாய்...ஆகி
அருந்தும் நீர்
உட்கொள்ளும் உணவு ஆகி - இவைகளால்
கை; கால்; உடம்பு;
கண்; காது; மூக்கு;...
இன்னும் உள்ளே
இதயம்; கணையம்,
ஈரல்; நுரையீரல்,
குடல்; மூளை,...
மேலும் குணம்; மனம்...
என்ற பலவாகி ஒன்றாய்
மனிதன் என்ற ஒன்றாய் !...
பரந்து விரிந்த பிரபஞ்சமும்
பார்வைக்கு பலதானாலும்
பகுக்காதே புகுந்தே காண்கின்
முடிவற்ற வொன்றின் தோற்றமே !
தன்னிலது பிரிவை எண்ணும் இணையாய் !
எதிர்க்கும் துண்டிப்பை ஏற்படும் வலியால் !
இல்லாமையும் இருப்பதுவும் இரண்டாகா !
எதார்த்த அமைவின் உள்ளமையே ! ஒன்றே !
மனம் நினைக்க மதி பிறக்கும்
கை; கால் அசையும் !
ஒவ்வொரு அமைப்பும் - அதில்
ஒவ்வொரு வித அசைவும் !...
பூமியின் சுழற்சி
பூவது மலர்வதிலும் !...
புரிவதும் ஓர் அசைவு !
புரிந்தால் ஒன்றின் அசைவே !!
உருவிற்கு முகமே வாசல் !
பலமுகங்கள் இல்லாமைக்கு !
இலகுவாய் இல்லாமைக்கு வழிகாட்டுவதால் !...
வாசலில் சிறப்பும் உண்டு !
ஒன்றினுரு யென்றிப்பதால்தான்...
உண்டாகுதே தானே அன்பு !
அதனால் அனைத்தையும் உணர வேண்டுமே...
தன்னைபோல் என்றே கொண்டு !
இல்லாமை பூத்த அவ்வொன்றானது !
இல்லாத இருப்பு !
ஏற்பட வேண்டும் மனிதனில் உணர்ந்து !
ஒற்றுமையும் நிலவிடுமே
உலகிலே என்றுமே நன்று !
உண்மையதை உணர்த்த
உதயம் நிகழும் எங்கும் !
உத்தம வழிகாட்டலே மதம், மார்க்கம் !
பேதங்கள் ஒழிக்கும் போதனைப்
பாதையில் வேற்றுமை காண்கின்...
ரோஹிங்யாதான் !
இல்லாமையின் மறுதோற்றம்தான் அமைதி !
அடைந்திட்டோர் கூறும் வாக்குதான்...
'உன்னை அனைத்திலாக்கு
உன்னில் அனைத்துமாகும்'
இஃது மனிதர்களுக்கு மட்டும்.

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார்இலங்கையை சேர்ந்த ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ்


 உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017
போட்டி -93வது மாதம்
போட்டிக்கவிதை எண் 14
தலைப்பு- வலி
கட்டிலில்
முட்டிச் சாவது
முடியாத வலி
காலமெல்லாம்
ஓடித்திரிந்த மேகம்
ஒரு நாளேனும்
ஓடாமல்
ஓய்வெடுப்பது
தீராத வலி..
பெற்றெடுத்த பெண்மை
அண்மையில் இருந்தது
நலன் காக்க
காலம் விரைந்து
அதை கனவில் காண்பதும்
கருப்பு வலி..
சொல்லாமல் வந்த
சொந்தங்கள்
காரணமின்றி
கரைந்து போவதும்
கொல்லாத வலி..
வார்த்தை
வானளவில் மிதக்க
உரிமையெல்லாம்
ஊரான் எடுக்கயில்
உரிமை வலி..
உள்ளூரும் உணர்வுகள்
ஊமையாய் கொல்ல
கொடி கட்டிப் பறக்குது
காதல் வலி..
இருப்புக்கேட்டு வந்தவனை
விருப்பின்றி விரட்டியடிப்பது
அகதி வலி..
கற்பனையை
களவாடி
காகிதத்தில் பொறிப்பது
கவிதை வலி..
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️


மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும்
 பெறுகின்றார்  இந்தியாவைச்சேர்ந்முத்துகார்த்திக். மா துறவன் 
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017
போட்டி -93வது மாதம்
போட்டிக்கவிதை எண் 17
தலைப்பு -விவசாயம்
பகலவனின் பரிவெளிச்சத்தில் கலைந்தது -என் உறக்கம்,
வேலைக்கு வேளையாகியதால் என்னவோ? -ஒரு கிறக்கம்.
சாளரம் வழி வந்த இங்கிதமில்லா ஒலி,
சாட்டையாய் அடித்தது ஏன் இதயத்தில்.
சற்றே நில்லாமல் அவ்வொலி நோக்கி
பறந்தன என் கால்கள்.
வரிசையில் வருமாறு கூறியும்,
வழிமுறை தவறியதால் வந்த சத்தம்.
அரசின் அங்காடியில் அளித்த - மாதமொருமுறை
ஆழாக்கு அரிசியில் அமைதியானது
மலையேறி மனைவியிடம் நீட்டினேன் - மஞ்சநெகிழியை
மயங்கிய நிலையில்.
குவளை நீர் பருகியதும் - குழம்பியது என் மனம்.
மல்லுக்கட்டுக்கிடையில் மாதத்தவனை அட்டையை
தவறவிட்டேனோ? -இல்லை
மஞ்சுவின் மோடமில்லாமல் மயங்கிய பொழுது
மறந்து விட்டேனோ? ஐயோ!
மறுமாதம் சோற்றைத்தொடுவது அரிதாகிவிட்டதே.
இம்மாதமே ஆழாக்கு அரசி
மின் அம்மி விலை - அடுத்த மாதம்
குளிர்சாதனப்பெட்டி விலை தன்னை எட்டி விடுமோ?.
மன்றாட மன்றமின்றி மக்கள் படும்
மன வருத்தம்தான் மாறுமோ?.
மதி கலங்கி மேல்நாட்டு மோகத்தால்
தவறிழைத்த நம் முன்னோர்களால் - வந்த நிலை
கதி கலங்கி உள்நாட்டிலேயே பஞ்சத்தால்
பட்டினியுடன் பட்டம் பெறும் நிலை
கழனிகள் எல்லாம் கனிணி கூடாரங்களாகின,
மனிதவிமானம் மகிழுந்தினுள் மறைந்து போனது,
விலையில்லா விவசாயம் வீணானது
விலை நிலங்களை விற்றதால் மட்டுமா?
கோதுமை குறைந்து மைதா மனதில் ஏறியதும் தானோ?.
விண் செல்லும் மனிதனும் ,
நுண்ணோக்கி பார்க்கும் மருத்துவனும்,
உண்பது உணவு தானே?.
உணவின்றி போனதற்கு
உழவன் மட்டுமே காரணமா? – இல்லை
உழவனுக்கு ஊழ் விளைவித்து
கருமம் அறுவடை செய்யும்
நம் ஊழ்கொண்ட உள்மனமா?.
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்தஅ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர்

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017
போட்டி -93வது மாதம்
போட்டிக்கவிதை எண் 13
தலைப்பு-தலைப்பு போலி அரசியல்வாதி
அரசியலில் தான் இவர்கள் வித்தகரே!
செய்கின்ற செயல் அனைத்தும் வித்தைகளே!
பிறர் மீது குறைகூறல் வாடிக்கையே!
அது இவருக்கே திரும்பிவர வேடிக்கையே!
இவர் ஆடும் சதுரங்கத்தில் நேர்மையில்லை
சுவர் தாண்டும் ஆட்டமதில் தோல்வியில்லை
எவர் பேச்சும் இவர்காதில் விழுவதில்லை
தன் மனதில் பழுதிருந்தும் அழுவ‌தில்லை
பதவிபக்கம் எப்பொழுதும் காற்று வீசும்
உதவிசெய்ய பணமிருந்தால் மட்டும் பேசும்
மக்கள் படும்பாடு ஏதும் இவரறியார்
தன்பதவி பற்றிக்கொள்ள ஏதும் செய்வார்
வாக்குறுதி சுடச்சுடவே தினம் கொடுப்பார்
வாக்கினையே அன்றிரவு இவர் மறப்பார்
மூக்குடைந்து ஒருநாள் தான் வெளிப்படுவார்
நேக்குடனே காய்களைத் தான் நகர்திடுவார்
அடையாளம் இவரைக் காணல் அவசியமே
விடைகொடுத்து வீட்டுக் க‌னுப்புவது அவசரமே
ஓட்டு எனும் பெரும்சக்தி நமக்குண்டு
திட்டமிட்டு பயன்படுத்த ஒருநாள் வெற்றியுண்டு
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

கவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.