மணமுடித்த மங்கையே நீவாழி !
மங்கலம்நிறை தங்கையே நீவாழி !
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி !
புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும் ,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும் .
மாமனாரும் மாமியாரும் போற்றுகின்ற
மருமகளாய் எந்நாளும் திகழ்ந்திடணும் ,
குடும்பத்தின் பொன்விளக்காய் நீயிருந்து
கோவிலாக வீட்டைநீ மாற்றிடணும் .
நாத்தனாரின் உறவுகளை வெறுத்திடாமல்
நீஅவர்க்கு உதவியாக இருந்திடணும் ,
பெற்றவர்கள் உனதன்பில் மனமகிழ்ந்து
பேரின்பம் கண்டவரும் உணர்ந்திடணும் .
புன்முறுவல் பூக்கின்ற பொன்முகத்தில்
புத்தம்புதுப் பிரகாசம் பொழிந்திடணும் ,
கண்மையோ கண்ணீரில் கரைந்திடாமல்
கவலைதனை மறைத்தின்பம் வழிந்திடணும் .
பொறுப்புள்ள தலைவியாக நீபெற்ற
புதல்வர்களை நன்முறையில் வளர்த்திடணும் ,
வெறுப்புதனை எவர்மீதும் காட்டிடாமல்
விருப்பமுடன் குடும்பத்தை நடத்திடணும் .
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.