புதியவை

தடாகத் தாமரைப் பூ கவினுறு கலைகள் வளர்ப்போமே (கவிதை )சையத் முகமட்கவினுறு கலைகள்
வளர்ப்போமே ..
காவியம் பலவே
படைப்போமே...
கேள்விகள் கேட்டு
தெளிவோமே...
கேட்டதை தொடர்ந்து
நடப்போமே...
புவிதனில் பெயர்பெற
உழைப்போமே...
பொழியும் அன்பில்
நனைப்போமே ...
போகுமிடம் பயணம்
தொடர்வோமே....
பவனி வந்தே
மகிழ்வோமே....
அவதி படும் துயர்
துடைப்போமே...
ஆவதெ துவென
முடிப்போமே....
இவரா வெனவே
திளைப்போமே...
அவரால் முடியும்
நடப்போமே...
எவரும் நம்மிடம்
நட்பாமே...
ஏவல் அகற்றி
செயலாமே.....
உவகை கொண்டே
இணைப்பாமே....
ஆவல் மிக்கே
முனைப்பாமே....
கவலை போக்க
நடப்போமே....
காவலா யிரு; தமிழ்
வளர்ப்போமே...
காலம் யாவும்
தழைப்போமே...
கோல மயிலாய்
காட்சியாமே....
ஐவகை நிலங்கள்
காப்போமே....
ஈவதை பிறருக்கு
செய்வோமே....
பவளம் பயனாய்
இருப்போமே...
புவனம் ஏற்ற
வாழ்வோமே....

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.