புதியவை

தடாகம் குடும்பத்தை சேர்ந்த ஒசூர் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் நிறைவான வாழ்த்துக்கள்ஒசூர்  பாவலர்  கருமலைத்தமிழாழனுக்கு
மலாயப்  பல்கலைக்கழகம்  பாராட்டு
தமிழகத் தமிழாசிரியர் கழக  மாநில  மதிப்பியல்  தலைவரும், ஒசூர்  தமிழ்ச்சங்கச்  செயலாளரும்,  இலண்டன்  தமிழ்ச்சங்கம், இலங்கை  தடாகம்  கலை இலக்கிய  வட்டம், சிங்கப்பூர்  நிலா முற்றம், மலேசியா  ஊற்று  வலைதளம், துபாய்  கவியருவி, கவியுலகப் பூஞ்சோலை, தமிழ்க்கவிதைப் பூங்கா  போன்ற   இலக்கிய  அமைப்புகள்  இணைதளம்  வாயிலாக  உலக  அளவில்  நடத்தியக்  கவிதைப்  போட்டிகளில்  முதல் பரிசு  பெற்று,  அவ்வமைப்புகளின்  அழைப்பை  ஏற்று  சிங்கப்பூர், மலேசியா,  இலங்கை  நாடுகளுக்குச்  சென்று  பரிசும்  பாராட்டும்  பெற்று   வந்தவர்

 இருபத்தைந்திற்கும்   மேற்பட்ட   கவிதை, ஆய்வு  நூல்களை   எழுதியவருமான   ஒசூர்  பாவலர்  கருமலைத்தமிழாழனின்  ஐம்பதாண்டு  கால  இலக்கியப்பணி,  அவர்செய்த  தமிழ்த்தொண்டு,  அவர் எழுதிய  நூல்கள்  பற்றிய  திறனாய்வு  அடங்கிய  அவரின்  வாழ்க்கை   வரலாற்றை   மலேசிய  நாட்டின்  மலாயப்  பல்கலைக்கழகமும்,  தமிழ்நாட்டின்  அண்ணாமலைப் பல்கலைக்கழகமும்  இணைந்து  நூலாக்கம்  செய்தன.

அந்த  வரலாற்று  நூலை    மலேசியா  நாட்டின்  தலைநகர்  கோலாலம்பூரில்  அமைந்துள்ள  மலாயா  பல்கலைக்கழகக்  கருத்தரங்கு  மண்டபத்தில்  மலேசியா  நாட்டு  இளைஞர்  மற்றும்  விளையாட்டுத் துறை  அமைச்சர்  டத்தோ  சரவணன்  அவர்கள்  வெளியிட,, முனைவர்  திருவித்யா  நூலினை  ஆய்வு  செய்து  உரைநிகழ்த்த  மலாயப்  பல்கலைக்கழகத்  தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர்  குமரன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்  அரங்க  பாரி  ஆகியோர்  பாவலர் கருமலைத்தமிழாழனுக்கு  விருது  வழங்கி  சிறப்பு  செய்தனர்.

தடாகம் குடும்பத்தை சேர்ந்த ஒசூர்  பாவலர்  கருமலைத்தமிழாழன்
அவர்களுக்கு தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின்  நிறைவான  வாழ்த்துக்கள் 
நீடு புகழ் நலம் நிற்க நிலம் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.