புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஒக்டோபர் மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்

முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந் எம்.சக்திவேல்

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஒக்டோபர் மாதம் 2017
போட்டி -94 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-27
தலைப்பு::-புதியவிடியல்
சாலை இருமருங்கையும்
பசும் சோலைகளாய் மாற்றுவோம்
இனி சாலையோரத்து
சகதியில் குடியிருப்போரை
கல்வி வேந்தர்களாக்குவோம் !
கைகால் வளைத்து
கம்பி வளைத்துக்குள்
உடல் நுழைத்து
சிரமத்துடன் வாழ்வோரை
உயர்கல்வி பெறச்செய்வோம் !
தட்டேந்தியே வாழ்ந்து
தரையிலே படுத்துறங்கி
எழ்மையாகவே வாழ்வோரை
வழக்குரைஞ்ஞராக்குவோம் !
நரிஎலி நண்டு
காட்டுபூனைகள் பலபிடித்து
காட்டுவாசிகளாய் வாழ்வோரை
கணித மேதைகளாக்குவோம் !
மெலிந்த மேனியில்
கிழிந்த உடைஉடுத்தி
எண்ணையில்லா தலையுடன்
மங்கியே வாழ்வோரை
மருத்துவர்களாக்குவோம் !
கடும்வெயில் மழையில்
கால்வயிற்று கஞ்சியுடன்
வாழும் வறுமையானவர்களை
வான்புகழ
விஞ்ஞானிகளாக்குவோம் !
ஓட்டுரிமை தந்து
ஒப்பற்ற தமிழூட்டி
செம்மொழியில் படிக்கச்செய்து
சாலையோர மக்களுக்கு
புதியவிடியலை தந்திடுவோம் !

எம்.சக்திவேல் திருவேற்காடு சென்னை

ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார்இந்தியாவைச் சேர்ந்த கவிஞர்.அ.முத்துசாமி, தாரமங்கலம் 

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஒக்டோபர் மாதம் 2017
போட்டி -94 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-09
தலைப்பு -எங்கள் தமிழ் என்றும் வாழி !
எங்கள் தமிழ் சங்கத்தமிழ்
என்றே முழங்கு .
பங்கமில்லாத் தங்கத்தமிழ்
என்றே முழங்கு .
எம்பெருமான் முருகனுமே
ஈன்ற தமிழ்
கம்பனும் காப்பியனும்
காத்தத் தமிழ் .
வள்ளுவரும் இளங்கோவும்
வளர்த்த தமிழ் .
துள்ளிவரும் காவிரியும்
தொழுத தமிழ் .
ஆழ்வாரும் நாயன்மாரும்
ஆய்ந்த தமிழ்.
வீழ்ந்திடாமல் வளருகின்ற
வெற்றி தமிழ் .
திருமூலர் ஒளவையும்
தெளிந்த தமிழ்
திருமந்திரம் வேந்தனையும்
தந்தத் தமிழ் .
தேவாரம் திருவாசகம்
தெய்வத் தமிழ் .
நாவாரப் பாடுகின்ற
நல்ல தமிழ் .
காப்பியங்கள் காவியங்கள்
கணித்த தமிழ் .
மூப்பேதும் அறியாத
முத்துத் தமிழ்.
பாரதியும் தாசனுமே
படைத்த தமிழ் .
சாரதியாய் உலகினையே
செலுத்தும் தமிழ் .
கவிஞர்.அ.முத்துசாமி, தாரமங்கலம் .


மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இலங்கையை சேர்ந்த  வன்னியூர் கிறுக்கன்ஜீவதாஸ் மேக்சன்


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஒக்டோபர் மாதம் 2017
போட்டி -94 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-01
தலைப்பு -தடாகத்தில் தவழும்சிகரத்தின் படிகள்
கவிநூறு கலைகள்
கருத்தாய் வளர்த்திடுவோம்
வையகம் போற்றியே
வளமதை தொடுவோம்
செந்தமிழ் கொண்டே
சங்கீதம் இசைப்போம்
சங்கத்தமிழிலே
சந்தங்கள் தொடுப்போம்
தடாகம் மீதிலே
தாவிக் கொள்வோம்
கவிதையின் வடிவிலே
உயர்ந்து வெல்வோம்
சாகரம் தாண்டியே
சாளரம் திறப்போம்
சாவரம் உடைத்தே
சரித்திரம் படைப்போம்
சகதிகள் துடைத்தே
தூய்மை ஆவோம்
சாதனை செய்தே
பெருமை கொள்வோம்
சோதனை கடந்திடவே
பொறுமையாவோம்
வண்ணத் தமிழிலே
எண்ணம் கொடுப்போம்
பாரதி வழியிலே திறனை
எடுப்போம் வள்ளுவன்
குரலிலே எம்மை மறப்போம்
கம்பன் கவிதையில்
கருத்தைத் தரிப்போம்
சொந்த சிந்தையில்
நாளும் நடப்போம்
தடாக மூச்சைத்
தழுவிப் பிடிப்போம்
தமிழின் பேச்சை
தினமும் படிப்போம்
தாயே தமிழேன
தரணி முழங்கிட
சிறந்தே விடுவோம்
சிகரம் தொடுவோம்
உயர்ந்தே என்றும்
உயிராய் உறைவோம்
தூய மனதுடன்
நாளும் விழிப்போம்
தூயவர் பாதத்தில்
தினம் தவழ்வோம்
கலைகள் வளர்த்தே
காவியம் படைப்போம்
வன்னியூர் கிறுக்கன்ஜீவதாஸ் மேக்சன்


இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்"புத்தளத்துக்கவி"நிஸ்னி,

 உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி ஒக்டோபர் மாதம் 2017
போட்டி -94 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-02
தலைப்பு -விடியுமா...
கோடையில் கொப்பளிக்கும்
தணியா ஏக்கமாய்
அன்றென்ன இன்றென்ன
என்றென்றும் நிரப்பா
வறட்சியாய் நீண்டு செல்கிறது
மாப்பிள்ளை பஞ்சம்
கேடுகெட்ட சமூகம்
எப்போழுது விடியும்
படித்தேன் பட்டம் பெற்றேன்
கூடவே தண்டச் சோறு
முதிர்க்கன்னியென
முடிசூடிக் கொண்டேன்
காலைச் சூரியனாய்
இருந்த காலம் போய்
அஸ்தமித்து செல்கிறது
இளமையும் எய்த ஞானமும்
பெண் என்றதாலா
பண் இசைக்கிறீர் வாயால்,
சீ தனம் என,
முதுகெலும்பு முறிந்த
இடுப்பெலும்பு நொருங்கிய
"ஆண்" எனு‌ம் மகனே
ஆறிய கஞ்சாயினும்
நேறிய வழியில் உழைத்து
உனைக் காப்பேன்
வேரிலா வேந்தனே
நவீன பிச்சைக்காரனே
நாள் முழுதும் நானுழைப்பேன்
நீ நிறைய நான் தேய்வேன்
ஓசியிலே நீ வாழ
வேசி தவிர்ந்த வேறு செய்வேன்
கூசி நீ சாவுமட்டும்
பாசியாய் ரணம் மறந்து
நேசித்து வாழ்வேன்
நாயகா,
நாய் பொழப்பு மறந்து
நாற்ற செயல் துறந்து
நான் பிறந்த பாரம் போக்கு
ஏக்கர் கணக்கிலே காணி
ஏதுவான பெரிய வீடு
ஏற்றிச் செல்ல கார்
எழிலுக்காய் நகையென
நரம்பிலா நா கொண்டு
வரம்பிலா வரம் கேட்கிறாய்
வாரிசுச் சுமக்க
கைகூலி கேட்கும்
காடைச் செயல் மறப்பாய்
இருள் விடிய வரம் தருவாய்...
"புத்தளத்துக்கவி"நிஸ்னி,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்,

கவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.