புதியவை

தடாகம் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றோர் கவனத்திற்கு

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பினால் நடத்தப்படும் 
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிதற்போது 95வது மாதத்திதை  சந்திக்கின்றது  அல்ஹம்துலில்லாஹ் 
இப்போட்டியில் உலகில் பல இடங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான கவி உள்ளங்கள் பங்கு பற்றி சிறப்பித்தார்கள் அவர்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்  


இப்போட்டியினால் நாம்பல கவிஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கின்றோம் அந்தவகையில் தடாகத்தின் பங்கு உயர்வானது என்று கருதுகின்றோம் 

இன்று நாம் சிரமங்களை தவிர்பதற்காக போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்றவர்களின் உதவிகளை நாடுகின்றோம் தங்கள் சிரமம் பாராது எமது  முயற்சிற்கு உதவுமாறு அன்போடு வேண்டுகின்றோம் 

இது வரை நடத்திய போட்டிக் கவிதைகளில்(01 தொடர்க்கம் 94)வரை வெற்றி பெற்று   
.
"கவியருவி" பட்டம்,

 "கவித்தீபம்" பட்டம்

 "கவின்கலை" பட்டம் ,

 "கவினெழி " பட்டம்,பெற்றவர்கள் உடன் தாமதியாதியாது உங்களது வெற்றிபெற்ற கவிதைகளை எமக்கு விரைவாக (மாதம் -வருடங்களை )குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம் 

அத்தோடு போட்டியில் பங்கு பற்றிய ,தங்களின் இயற் பெயருடன்
,
02 புனைப் பெயர்,...
03 முழுவிலாசம்,....
04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....
05 தமது சொந்த புகைப் படம்.....
06 தன்னைப்பற்றிய குறிப்பு(இது கட்டாயம் ) இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து இம் மாதம் முடிவதற்குள் அனுப்பி உதுவுமாறு அன்போடு வேண்டுகின்றோம் 

எங்களது பணி! அற்புதமான பணி!அரிதான பணி !!இதை வரமாகபயன் படுத்திக் கொள்ளுங்கள்
கடைசி  நிமிடத்தில் எமக்கு யாரும் சிரமம் தருவதை தடுக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம் 

உங்களது வெற்றிபெற்ற கவிதை விபரங்களை sk.risvi@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கவும் 

அத்தோடு இது பற்றிய தகவலை நட்பு உள்ளங்களுக்கும் தெரியப் படுத்துங்கள் 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்சிக்காகவும் 
கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை 

'கவினுறு கலைகள் வளர்ப்போம்'

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.