புதியவை

புதை குழி போதும்- பரீட் சன்-



அமைச்சர்களுக்கு முன் அதிகாலையில் என் பாட்டன் சீனி ஆலிம் கல்வைத்து கட்டத்தொடங்கிய பள்ளிவாசலுக்கு அருகில் வாழ வேண்டும் என்றுதான் இங்கு வந்தேன்
ஆயினும் அவசரப்பட்டு விடாதீர்கள்
இஸ்ராயீலே!
ஜனாஸாவை பார்க்க என் உறவுகளுக்கு அனுமதி மறுக்கப்படலாம்
எனக்கு ஒரு கபுறும்
மறுக்கப்படலாம்
ஆதலால் இன்னும் சற்று பொறுங்கள்
காரைதீவுக்கு செல்கிறேன்
அங்கு வந்து உயி்ரெடுங்கள்
அன்பை போதிக்கும் ஒரு கோயிலுக்குள் ஜனாஸா தொழுகையை நடத்தட்டும்
கடற்கரை ஓரத்தில் ஒரு புதைகுழியாயினும் தருவார்கள்
கபுறு இல்லாவிட்டாலென்ன
ஒரு புதை குழி போதும்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.