புதியவை

-ரணம் ஆறாத வெந்த நெஞ்சம் வேண்டாமே.(கவிதை)..கா.ந.கல்யாணசுந்தரம்உயிர்களிடத்து அன்பு வேண்டும்
நம்முயிர் போல் அனைத்துயிரும்
நானிலத்தில் இயங்குதென்ற
உண்மை அறிதல் வேண்டும் !
வதைக்கும் பண்பை விட்டொழித்து
போற்றிக் காத்தலை உயர்நெறித்
தத்துவமாய் மேற்கொளல் வேண்டும்
உலகின் நியதியை மதித்திடல் வேண்டும் !
சந்தைக்கு ஏற்றிய பாரவண்டிதான்
என்றாலும் கனிவு கொளல் வேண்டும்
முதலாளி கெடுபிடிதான் இருப்பினும்
காளையை அடித்துத் துரத்தக் கூடாது !
சாட்டை ஒரு தூண்டுகோல் என்றறிந்து...
காளையின் உடலெங்கும் தழும்பு தழுவ
அடித்தல் வதைக்கும் செயலாகுமே !
அது வீட்டு விலங்கு... செல்லப்பிராணி !
நமது வாழ்வைச் செம்மையாக்கி
பொருளீட்ட உதவும் விலங்கினத்தில்
உழவு மாடும் வண்டிமாடும் பால்தரும்
நல்ல பசுவும் தெய்வத்துக்கு இணையே !
அன்பு பொழியும் அருள்நேஞ்சத்தோடு
அரவணைத்து பழகுங்கள் வீட்டு விலங்கோடு !
துன்புறுத்தி அதில் இன்பம்காணும் மாக்களாய்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சம் வேண்டாமே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.