புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு நவம்பர்மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்


முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இலங்கையைச் சேர்ந்த முருசேசு - தயாநிதி கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர்மாதம் 2017
போட்டி -95 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-04


தலைப்பு:எங்கே போனாய் தம்பி ?
என்னருமைத் தம்பியே இயம்பும் வார்த்தை கேட்பீர்
உன்னை நான் மறக்கவில்லை உலகமும் அழிவதில்லை
கொல்லையிலே வைத்த தீ கொழுந்துவிட்டு எரியும்போது
புல்லுருவிச் செயல் செய்யப் G+தமாய் வருகிறார்கள்!
மரணித்துப் போனாய் என்று மார்பு தட்டுறார்கள்
மண்ணிலே புதைந்தாய் என்று மாண்புற்று நிற்கிறார்கள்
கண்ணிலே அகப்படாய் என்று கழிப்புற்று வாழ்கிறார்கள்
தன்னினைவை மறந்து தத்தளித்து திரிகிறார்கள்
கதிரவன்போல் கனகதிர் எறிந்தாய் தம்பி நீ
எதிரியையும் எளிதில் புரிந்தாய் தம்பி நீ
தகுதியை உணர்ந்து வாழ்ந்தாய் தம்பி நீ
குருதியை குதறி எறிந்தாய் தம்பி நீ!
மாங்காய் புளியங்காய் என்று உணவுண்டு தம்பி
தூங்காமல் துவளாமல் செயற்பட்டாய் தம்பி நீ
தங்கு தடையின்றித் தேங்காமல் சென்று தம்பி
பங்கயம்போல் முகத்தோடு பாரை வெல்ல இருந்தாய் தம்பி!
வானளந்தவன் வழியில் வந்தவன் தம்பி நீ
வாட்டமில்லா ஓட்டம் கொண்டவன் தம்பி நீ
காடுகரம்பெல்லாம் கடந்தவன் தம்பி நீ
கடுந் தியானம்கொண்டு வாழ்ந்தவன் தம்பி நீ!
இலக்குத் தவறாமல் அம்பை விட்டாய் தம்பி நீ
இம்மென்ற குரலை ஒடுங்கச் செய்தாய் தம்பி நீ
இடிக்குமேல் இடிஇடிக்க எழுந்து வந்தாய் தம்பி நீ
அடிக்குமேல் அடிவைத்துச் அஞ்சாமல் சென்றாய் தம்பி நீ!
கத்தும் கடலை முத்தமிட்டாய் தம்பி நீ
பத்துத்தலை இராவணனை பணியவைத்தாய் தம்பி நீ
சொத்துச் சுகமெல்லாம் தூக்கி எறிந்து தம்பி நீ
சுடராக இருந்தாயே துவளாத மனமுடையோனாய் !
இப்போது எங்கு சென்றாய் தம்பி நீ
எப்போது திரும்பி வருவாய் தம்பி நீ
முப்புரம் எரித்த ஈசன்கூட தம்பி உன்னை
முன்னின்று நடத்த வருவான் எழுந்துவா தம்பி நீ!
முருசேசு - தயாநிதி கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் வேலணையூர் ரஜிந்தன்.- வேலணை,யாழ்ப்பாணம்

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர்மாதம் 2017
போட்டி -95 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-22
தலைப்பு- வாய் திறவேல் வல்ல தமிழ் வழக்கொழியும்
ஊரை விட்டு உறவை விட்டு,
நாட்டை விட்டு வீட்டை விட்டு,
புலம்பெயர்ந்து புது நாடு புகுந்தாலும் ;
எம் மொழியை நாம் மறவோம்..!!
கால காலமாய் காத்து வந்த மொழி...
கம்பன் முதல் கண்ணதாசன் வரை,
கவியாலே பாரதியும் வாழ்த்திய மொழி...
காலத்தால் அழியாத திருவள்ளுவர் கண்ட மொழி!!
தலைசிறந்த பாவலவர்களையும்
தன்னிகரில்லா தலைவர்களையும்
தரணிக்குத் தந்ததெங்கள் அன்னைமொழி!!
தாய்மொழியைக் காப்பது எங்கள் பணி..!!
தமிழனோடு தமிழாலே உறவாடு...
தமிழ் இனிமை நா சுவைக்க உரையாடு...
தவழ்ந்து மகிழும் மழலைக்கும் தமிழ்ப் பெயர் சூட்டு...
தலைசிறந்த தமிழ்மொழியின் புகழ் பாடு..!!
வான் புகழ் கொண்டதெங்கள் தாய்மொழி...
வாய் திறவேல் வல்ல தமிழ் வழக்கொழியும்..!!
வேலணையூர் ரஜிந்தன்.- வேலணை,யாழ்ப்பாணம்


மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இந்தியாவைச் சேர்ந்த வேல்முருகன்
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர்மாதம் 2017
போட்டி -95 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-08
தலைப்பு புதிய தலைமுறை..!
சாகத்துணிந்த வீரனுக்கு
தடையா மறத்தமிழனுக்கு?
போடாடே மூடா தூர நீயும்
எத்தனைக்காலம் ஏமாற்ற முடியும்?
அஞ்சி அஞ்சி செத்தது போதும்
உடனே துணிந்து எழுந்து வா -நீயும்..
எல்லாத்திற்கும் முடிவு உண்டு
இன்று தமிழனாய் ஒன்றிணைந்து...
சொர்க்கமாய் இருந்த கிராமங்கள் யாவும்
ஏனோ இன்று நரகமாய் போனது..?
அது யாரால் தரிசாய் ஆனது...
தமிழனின் வீரத்தைச் சோதிக்க நினைதாய்
இதோ காட்டிவிட்டோம் நாங்கள் யாரென்று...!
சாதரணமானவர்கள் என நினைத்தாயோ...
வலிமை மிக்க இளம் மாணவர்களை...மாணவிகளை..
தானாய் வந்து தட்டி எழுப்பிவிட்டாய்
ஓய்வில் இருந்த இளைஞர்களை...
யாராலும் வெல்ல முடியாது தமிழர்களை...
தமிழன் தேவை இல்லையென்றால்
இந்தியாவிற்குள் நாங்கள் ஏன்?
அயோக்கியர்களெல்லாம் ஒன்று கூடும் போது
யோக்கியமானவர்கள் மட்டும் ஏன் ஒன்றிணையக்க்கூடாது?
குற்றம் குன்றாய் செய்துவிட்டீர்...
அதனை உடைக்க நாங்கள் துணிந்துவிட்டோம்
வெறும் நீர்க்குமிழிகளென்று இருந்துவிட்டீர்...
மாணவர்களின் உணர்ச்சி எரிமலையை ...
இன்று வெடித்ததொன்றும் பஞ்சல்ல
மாணவப் புரட்சிடா...மக்கள் உணர்ச்சிடா
இது ஒண்ணும் வம்பல்ல...
இளைஞனின் எழுச்சிடா... தமிழனின் உரிமைடா...
எத்தனை நாட்களுக்கு நீங்டா...
நாளை முதல் இங்கு நாங்டா...
எதுவும் இங்கு நிரந்திரமில்லை
சுழலும் உலகில் அறிவாய் -நாளை..
காப்பானென்று நினைத்தோம் உம்மை
இன்று நீர் களவாணியாக மாறியதால்
சும்மா விட்டுவிடுவோமோ - திருடனை
யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான்
மேல் மட்டம் செய்தால் மட்டும் அது எப்படி நியாயமாகும்?
அன்றை தலைவர்கள் யாவரும்
அன்னியர்களை விடரட்டி விடுதலை வாங்கித் தந்தார்கள்
இன்றைய தலைவர்கள் எல்லாரும்
தாய் நாட்டை விற்கவே முயல்கிறார்கள்...
ஏன் இந்த முரண்பாடு...?
எமனையும் எலி வுழுங்குமடா
முயலை மட்டும் விட்டிடுமா?
தன்மானத்தை விற்றுப் பிழைப்பதற்கு
நாங்கள் என்ன அரசியல்வாதிகளா?
அன்று நாங்கள் தவறு செய்துவிட்டோம்
உமது வாக்கினை மெய்யென்று நம்பி
வாக்களித்து ஏமாந்தது போதும்...
மீண்டும் அதை செய்ய மாட்டோம் ...
அரசியலில் நுழைந்தது எதற்கு?
ஏமாற்று வேலை செய்யவோ?
போட்டியில் கலந்தது எதற்கு?
வரிப்பணத்தையெல்லாம் சுரண்டவோ?
இன்றைய அரசியல்வாதிகள் மீது
நம்பிக்கையற்றுப் போனது
காரணம் அரசியலென்றாலே..
இன்று சுய நலம் ஆனது...
பெரிச்சாளிகள் மட்டும் தப்பிக்க முடியுமாம்
சட்டத்தின் ஓட்டையிலிருந்து...
அவ்வளவு பெரிய பொந்திலே
சுண்டெலிக்கு ஏனோ வழியில்லை
இது பெரும் முரண்பாடு என்றாலும்
சட்டத்தை மதிக்கிறான் ஏழை..என்பதுதான் உண்மை !
வெளியிற் சொன்னால் வெட்ககேடு
அரசியல்வாதிகளின் செயலு...
உடனே உமது தவற்றை நிறுத்து
இல்லையேல் ஒதுக்கிடுவார் வெறுத்து
சேவை செய்ய உமக்கு துப்பில்லாத போது
இனியும் சும்மா இருப்பாரோ...
நீங்கள் செய்யும் தீங்கினை வேடிக்கைப் பார்த்து கொண்டு
குற்றம் செய்யாவிடில் அச்சம் தேவையில்லை
அரசியல் செய்யாமல் அறச் செயல் செய்வோர்க்கே
இனிமேல் நாங்கள் வாக்களிப்போம்..
ஏனெனில் நாங்கள் புதிய தலைமுறை..!
வேல்முருகன் ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்"முல்லைத்தீவு.*கவிஞர் வர்மன்*முல்லைத்தீவு.*


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர்மாதம் 2017
போட்டி -95 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-02
தலைப்பு:*துரோகத்தின் எழுச்சி!!!!!*
*எந்திர யுகத்திலே இரும்பு மனிதர்களாய் தந்திர நரிகளின் தரங்கெட்ட சதிகளால் மந்திர உலகிலே மாயமாய் போவதோ.....*
*பணம் போர்த்த உடல்கள் பத்தையும் செய்யுமாம் பிணம் நாறும் போது எட்டுக்கை வேண்டுமே மனம் என்ற தொன்று மலையாகிப் போனதோ......*
*சிங்கத்தை சிங்கம் கொண்டு தின்பதுமில்லை சினங் கொண்ட வேங்கையும் சிறுத்தை உண்பதில்லை மானங்கெட்ட மானிடம் மனிதம் கொண்று பார்க்குது.....*
*நிகழ்காலம் இன்றே நிரந்தரம் என்று எதிர் காலம் ஒன்றை அமிலத்தால் அழிக்கிறான் நெல்லிட்டால் நெல்லும் புல்லிட்டால் புல்லுமே புத்தி கெட்ட மாந்தரினம் புதையுண்ட போகுமே.....*
:-கவிஞர் வர்மன்*
*3ம் வட்டாரம் முள்ளியவளை,முல்லைத்தீவு.*


விதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளை விடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்சிக்காகவும் 
கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை 

எமது நிபந்தனைகளை மீறிய 17கவிதைகளை 
நாம் போட்டியில் இணைத்துக்கொள்ள முடிவமைக்கு  வருந்துகின்றோம்

'கவினுறு கலைகள் வளர்ப்போம்'

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.