புதியவை

குரங்கிலிருந்து மனிதனா ?!ஷேக் அப்துல்லாஹ் அதிராம்பட்டினம்.


கடலே அலைகளாய்ப் பின்நுரையாய்
கனப்பொழுதில் அவைகளும் கடலே !
காலம் கற்பிக்கும் தன்முறையைக்
கவனத்தில் பதித்தால் காலமே !
நாளும் நடப்பதில் உள்ளக்கலை
நம்மில் உணருவோம் நாளுமே !
தன்னில் ஆழம் காண்கின்
தர்மம் தனக்கே தன்னிலே !
உன்னில் என்னில் எல்லாமும்
உண்டாகும் விதம்காணு உன்னிலே !
ஒன்றேதான் உள்ளதென வுணர்ந்தால்
ஒன்றில் பலதானாலும் ஒன்றே !
ஒன்றதன் குணங்கள் உருவிலாகி
ஒவ்வொன்றும் ஓர்தோற்றத்திலே ஒன்றி...
ஒன்றில் குரங்கும் தோன்றும்
உண்டாகும் மனிதனுமே வொன்றில் !
அன்றி அஃதேமாறி வேறாக !
அதனுள் தனித்ததன்மை இழந்தாலன்றி !
விதையே மரமாகி விரிந்தே
வெகுவாக தந்தது விதையே !
புழுவே பூத்திட முயன்றே
புதுமை வண்ணத்துப்பூச்சியானது புழுவே !
குளவியே ரீங்கார ஓர்மையினால்
தன்னாதி மாற்றுவதும் குளவியே !
ஒன்றின் தோற்றத்தின் பருவங்கள்
உண்டாகிடும் ஒர்வாழ்க்கை வொன்றிலே !
ஈசல் பறக்கும் எப்பொழுது ?
எல்லாப் புழுவுமாக ஈசல் !
இனிப்பு பொருளில் எங்கும்
எறும்புகளை வுண்டாக்கும் இனிப்பு !
குட்டையில் முளைக்கும் பசுமை
கொட்டியநீர் தேங்கின் குட்டையில்
பருவம் பக்குவம் பொருந்தின்
படைக்கும் சூழலில் பருவம் !
உலகம் தட்டை என்றார்
உணர்ந்த பகுப்பிலன்று உலகம்
சூரியன் உதிக்கும் கிழக்கில்
சூட்சும அறிவிலன்று சூரியன்
உருவம் பெற்றதோ ! இறையமை
உண்மையில் அரூபமதில் உருவம்
பகுப்பில் பாதைகள் பலதிறந்தும்
பதிவு நிலைத்ததா ? பகுப்பில் !
பகுப்பில் அறிவின் தெளிவில்
பார்த்தவை நிலையில்லை பகுப்பில் !
இயற்கைத் திறன்களை அளந்திடின்
இலக்கணம் பொய்த்திடுமே இயற்கை !
ஒவ்வொன்றும் புதுமையே தன்னிலே !
உள்ள...மற்றதின் மாற்றமல்ல... ஒவ்வொன்றும் !
தன்னில் மூலம் எவ்விதம் ?
தந்ததா !? பூரணம் தன்னில் !
உருவம் உண்டாகும் விதமும்
உணர்ந்திடின் குணமே உருவம் !
தன்மை வொத்தது பலதும்
தன்னில் காட்டும் தனித்ததன்மை !
வேறே யென்பதிலே பேணு !
விவரம் நிறைவில் வேறே !
புரிதலில் பிசகின் குற்றம் !
புண்ணியம் தெளிந்தால் புரிதலில் !
உயிரகன்று விட்டால் மண்ணே
உருவம் நிலைத்திருக்கவே உயிர் !
குரங்கு மனிதனாகும் புதுமை !?
குணம்காட்டின் மனிதனும் குரங்கு !
மனிதன் பிறப்பே புதுமை
மதியில் கண்டால் மனிதன் !
மாறியதை எங்கே கண்டான் ?
மானிடா ! வேண்டாம் மாறி...யதை !
பூரணம் உணரும் இவனில்
பூரணம் தோன்றும் பூரணம் !
காரணம் கற்பிக்க இயலா !
கரைகாண முடியாக் காரணம்
தோரணமே வுலகில் பலதும்
தோற்கும் பகுத்தறிவின் தோரணம் !
கூறனும் இதுதான் உண்மை
குரங்கிலில்லை மனிதனைக் கூறனும் !
சுயமே தோன்றி காட்டும்
சுகமாம் தெரிந்தால் சுயமே
சுருதி தருமே இன்பம்
சோதி பெருமே சுருதி
மருவி வழக்கில் கண்டோம்
மறப்போம் இனிமேல் மருவி
உறுதியே என்றுமே கொள்வோம்
உண்மையை வுணர்ந்த உறுதியே !
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.