புதியவை

இந்து சமுத்திரத்தின் முத்து" -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு இலங்கை(நாடு
1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன்(Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தஇலங்கை நாடு 
தற்போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது 
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.
இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.
 கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது.
1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக  (கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை) தலைநகராக அமைந்துள்ளது.
 இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா  ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.
இலங்கை "இந்தியாவின் கண்ணீர்த் துளி" என அதன் வடிவம் மற்றும் அமைவிடம்என்பவற்றால் குறிக்கப்படுகின்றது 
"இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. 
"புன்னகைக்கும் மக்களின் தேசம்" எனவும் சொல்லப்படுவதுண்டு 
இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.
இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடு . 
இது சார்க் ஆரம்ப உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் அவைபொதுநலவாய நாடுகள்ஜி77கூட்டுசேரா இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் "உயர்" மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்ட நாடாகும். 
இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டிகாலிகுருநாகல்,அநுராதபுரம், யாழ்ப்பாணம்நுவரேலியா, திருகோணமலைமட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன.
 இலங்கை 25 மாவட்டங்களாகளாகும்
 256 பிரதேசச் செயலகங்களாகவும், 
14,008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன
இங்கு  மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. 
அவை, மாநகர சபைகள்
 நகர சபைகள் 
 பிரதேச சபைகள்என்பனவாகும்
முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம்  , சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்), சேரன்தீவு உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது  
1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது.
 (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்தப் படுகிறது). அதன் அமைவின் காரணமாக "இந்து சமுத்திரத்தின் நித்திலம்" என்ற புகழும் இதற்கு உண்டு
புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள்யானைத் தந்தம்முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை,
இலங்கைக்கு 1948யில் சுதந்திரம் கிடைத்த பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆரம்பத்தில் சிறிது காலமே பின்பற்றியபோதிலும் அது ஆசியாவிலே மிகமுன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கையையும் மேற்கொண்டது.
 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 
1977-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது
தற்போது உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, உணவும், குடிவகைகளும்,
 தொலைத் தொடர்புகாப்புறுதி மற்றும் வங்கித் துறைகளாகும்.
 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் ஏற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%). அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. 
வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது.
 1997–2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. 
எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. கொழும்பு பங்கு பரிவர்த்தனை 2003ல்ஆசியாவிலேயே அதி கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்தது  .
தற்போது, தென்னாசியாவில் உள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும்
 இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன.
 காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை
1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது.
 1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
இலங்கையின் நிர்வாகப் பிரிவுகள்
மாகாணம்தலைநகர்பரப்பளவு (km²)பரப்பளவு
(சதுர மைல்)
சனத்தொகை
மத்திய மாகாணம்கண்டி5,6742,191
2,556,774
கிழக்குதிருகோணமலை9,9963,859
1,547,377
வட மத்திய மாகாணம்அநுராதபுரம்10,7144,137
1,259,421
வடக்குயாழ்ப்பாணம்8,8843,430
1,060,023
வட மேற்குகுருநாகல்7,8123,016
2,372,185
சபரகமுவஇரத்தினபுரி4,9021,893
1,919,478
தெற்குகாலி5,5592,146
2,465,626
ஊவாபதுளை8,4883,277
1,259,419
மேற்குகொழும்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.