புதியவை

மூத்த கலை இலக்கிய பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளி. சட்டத்தரணி எஸ். முத்துமீரான்-கலைமகள் ஹிதாயா ரிஸ்விகிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்டவர்
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்சட்டத்தரணி எஸ். முத்துமீரான்
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்களின் நாயகன் 
குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்
.பிறந்த மண்ணையும் சக மனிதர்களையும் நேசிக்கின்ற மனித நேயமிக்க படைப்பாளி 
கவிதை .சிறுகதை .வானொலி நாடகம் .உட்பட "கிராமிய இலக்கிய ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர்."
பட்டமும் சட்டமும் படித்து கல்முனை நீதி மன்றத்தில் புகழ் பெற்ற ஓர் சட்டமேதையாக கடமை புரிகின்றவர் ,
ஆசிரியராக, அதிபராக இருந்த எஸ் முத்துமீரான் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பது போல் ஓர் சிறந்தபடைப்பாளியுமாவார்
இலங்கை மண்ணில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் உள்ளனர் அவர்களுள் பெயரெடுத்துச் செல்லக்கூடிய தரமான எழுத்தாளர் களில் இவரும் ஒருவர்
பிறந்த மண்ணையும் சக மனிதர்களையும் நேசிக்கின்ற மனித நேயமிக்க படைப்பாளி
 நான் பிறப்பதற்கு முன்பே1958 இல் "காதலும் கருணையும்"எனும் முதல நாடகம்  இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது 
அத்தோடு உருவகக் கதை; சிறுகதை; கவிதை ; ஆய்வில் என பல சாதனைகள்.புரிந்தவர் 
இலங்கை வானொலி முஸ்லிம் .சேவையில், இலக்கிய மஞ்சரியை தொடர்ந்து நடாத்திபாராட்டுப் பெற்றவர் .
10வருடங்கள்   தினகரன்வார மஞ்சரியில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் என நாட்டார் இலக்கியம் நெய்தவர்.
100இற்குமேல் பிற மொழி கதைகளை மொழி மாற்றம்  செய்தவர் .
நிந்தவூரான்; முத்து; நிந்தன் என பல  புனைப் பெயர்களில்  மண்வளம் நிறைந்த சிறந்த படைப்புக்களை  தந்தவர் 
உள் நாட்டிலும்; வெளிநாட்டிலும்பல  பாராட்டு கௌரவங்கள் பெற்ற இவரை வளரும் சமுதாயத்துக்காக அறிமுகம்  செய்வதில்  பெருமைப்படுகின்றேன் 
தமிழ்மொழி உள்ளவரை  எஸ் .முத்து மீரான்  பெயர் நின்று ஒலிக்கும்.
இன்னும் பல்லாண்டு வாழ, அவரது பல்லாயிரம்  ரசிகர்களில் ஒருத்தராய்  நானும்  இறைவனை வேண்டுகிறேன்
எஸ் .முத்துமீரான் அவர்களை தடாகம் பன்னாட்டு அமைப்பு மதித்து அவர்கள் பெயரில்"முத்துமீரான் விருது" சிறந்த நூல்களுக்காக கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது
தமிழ்மொழி உள்ளவரை எஸ் .முத்துமீரான் அவர்களின் பெயர் நின்று ஒலிக்கட்டும் .
இன்னும் பல்லாண்டு வாழ, அள்ளாஹ்வை வேண்டுகின்றோம்
நன்றி
தடாகம் பன்னாட்டு அமைப்பு

முத்து மீரான் விருது க்கு இது வரை எமக்கு வந்த நூல்கள்

01--"மறையாத சூரியன்" ( நாவல்)
------எழுதியவர் யாழ்பானம் -மலரன்னை
02--"நீறு பூத்த நெருப்பு "(சிறுகதை )
------எழுதியவர் பாண்டிருப்பு -கலாபூசணம் வே சண்முகநாதன்
03---"இந்த காலைப் பொழுது "(புதுக்கவிதை "
------எழுதியவர் அட்டாளைச்சேனை -ஏ .எம் .ஆஸ்கர்
04--"மயங்குகிறேன் மழைக் காதலியே" (மரபு தூவிய -துக்கவிதைகள்)
----- எழுதியவர் இந்தியா ராம்க்ருஷ்
05--="நம்பினார் கெடுவதில்லை "(சிறுவர் சிறுகதைகள் )
----எழுதியவர் கல்முனை முகில்வண்ணன்
06---"அஞ்சிறைத் தும்பி "(இலக்கிய கட்டுரைகள் )
--=--எழுதியவர் இந்தியா அர .விவேகானந்தன்
07--"செப்பேடு "(மரபுக்கவிதை)
---- எழுதியவர் இந்தியாபுலவர் கருமலைத் தமிழாழன்
08"கீறல் "(சிறுகதை )
----எழுதியவர் யாழ்பானம்அற்புதராணி காசிலிங்கம்
09----'நவரசம்' "(புதுக்கவிதை )
---எழுதியவர்மன்னாரமுது அஹ்னப்
10--"உணர்வுச் சோலை " "(புதுக்கவிதை )
---எழுதியவர் பாத்திமா ருஷ்தா காத்தான்குடி
11--"தூரிகைப் பூக்கள் "(மரபுக்கவிதை )
---எழுதியவர் இந்தியா அர .விவேகானந்தன்
12- "புழுதி மண்ணு" -(நவீன நாட்டார் கவித்தொகுப்பு)
---எழுதியவர் அட்டாளைச்சேனை -எழுகவி எம்மையெம் .ஜலீல்
--13 "இலங்கையின் முதல் பூர்வீகம் முஸ்லிம்களே "ஆய்வு நூல்
----எழுதியவர்முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
...14 ."உன்னோடு வந்த மழை " "(புதுக்கவிதை )
...  எழுதியவர் மருதமுனை விஜிலி
...15"மனசெல்லாம்" (கைக்கூகவிதை)
......எழுதியவர் இந்தியா கா .ந .கல்யாண சுந்தரம்
...16"எண்ணச் சிதறல் " (மரபுக்கவிதை )
....எழுதியவர்டென் மார்க் பைந்தமிழ்ச் செம்மல் வ.க ....பரமநாதன்
...17"திருக்குறளில் எழுத்தும் சொல்லும்" (ஆய்வு நூல் )
....எழுதியவர் இந்தியாக .ஜெயசங்கர் -எம் .ஏ
...18:கவியரசு கண்ணதான்" (புதுக் கவிதை நூல் )
...எழுதியவர் இந்தியா க .ஜெயசங்கர் -எம் .ஏ
...19"முத்தன் பள்ளம் "நாவல் 
...எழுதியவர் இந்தியாஅண்டனூர் சுரா 
...20"காற்றில்  தெரிந்த கனவுகள்" கவிதை நூல் 
...எழுதியவர் இந்தியா பைந்தமிழ் பாமணி
...21"பன்முகம் "கட்டுரை நூல் 
...எழுதியவர் -மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா மெல்போன் அவுஸ்திரேலியா 
...22";கட்டவிழ்ந்த காகிதங்கள்" கவிதை நூல் 
...எழுதியவர் -  ஒலுவில் இலங்கை ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ் 
...23-"மௌனத்தின் விலை என்ன"கவிதை நூல்  
...எழுதியவர் இந்தியா சரஸ்வதி பாஸ்கரன் 
24-"பூக்கவா புதைக்கவா "கவிதை நூல் 
...எழுதியவர் இந்தியா மலிக்கா பாரூக் 
...25"விரியப்போகும் அரும்புகள்  " கவிதைத் தொகுதி 
...முகம்மது அஸ்கர் இலங்கை இறக்குவானை 
...26 கரை சேராத நதிகள் "புதுக்கவிதைத் தொகுதி "
    ஆர் .எஸ்  கலா  -மலேசியா 

இதன் முடிவு நாடுவோர்களால் கிடைக்கப்பெற்றுஉள்ளது
விரைவாக தருகின்றோம்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.