புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வழங்கப்படும் முத்துமீரான் விருது பெறுகின்றார் - மகா தேவ ஐயர் ஜெய ராமசர்மா (முன்னாள் தமிழ் மொழிக் கல்விஇயக்குநர்) 01-நூல் -"பன்முகம் "கட்டுரை  
முதல்பதிப்பு -ஒக்டோபர் -2017 
196-பக்கங்கள் , 

மகாதேவஐயர் ஜெயராமசர்மா


பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டமும். கல்வியியல் துறையில்
டிப்ளோமா. சமூகவியல் துறையில் டிப்ளோமா.பட்டமும்.
கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி
பட்டமும்..

கணினித்துறையில் டிப்ளோமா.பட்டமும்.பெற்று
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பணி.புரிந்தார்


தமிழ்மொழி கல்விப் பிரிவு இயக்குநர், இலங்கை கல்வித் திணைக்களம்.
வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ்,
இந்துகலாசார விரிவுரையாளர். யாழ்ப்பாணம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர். ஆசிரிய ஆலோசகர், தீவக கல்வி வலயம். இலங்கை வானொலி அறிவிப்பாளர்.
இலங்கை வானொலி நாடகத் தயாரிப்பாளர். என்று தன நாமத்தை பதிவுக்குள்ளாக்கியவர் 


பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் பறை சாற்றும் இவர் இது வரை
எழுதிய நூல்கள்


1) தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்
2) தமிழ் படிப்பது எப்படி?
3) திருப்பம்
4) நெஞ்சே நீ நினை
5) என் கடன்
6) வள்ளுவர் பேசுகிறார்
7) வாழும் தமிழ்
8)தமிழும் கிறீஸ்த்தவமும்
9) கோவிலும் நாமும்
10) வட்டுவில் முருகன் திருவூஞ்சல்
11) பேர்த் ஸ்ரீ பாலமுருகன் திருவூஞ்சல்
12) உணர்வுகள் [ கவிதை நூல் ]
13)கோலங்கள் ( கவிதை நூல் )


சுமார் 20 
இற்கு மேற்பட்டநாட்டிய நாடகங்கள்,  10இற்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்கள்,

 100 ஓரங்க நாடகங்களை
 உருவாக்கி நிகழ்த்தயுள்ளார்

கீழ்  வரும் மாநாடுகளில் பங்குபற்றி சிறப்பித்துள்ளார்  1) அகில உலக சைவசித்தாந்த மாநாடு (மதுரை - 2008)

2) அகில உலக சைவநெறி மாநாடு (சிட்னி அவுஸ்திரேலியா - 2014)

3) பன்னாட்டு திருக்குறள் மாநாடு (சென்னை - 2015)

4) தமிழ் கற்பித்தல் மாநாடு (அடிலெயிட் பல்கலைக்கழகம் 2015)

5) தமிழ் கற்பித்தல் மாநாடு (மொனாஷ் பல்கலைக்கழகம், மெல்பேண் - 2015)

6) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உலக சைவ மாநாடு (யாழ்/ பல்கலைக்கழகம் - 2016)

அத்தோடு
1) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் முன்னாள் தலைவர்

2) இலக்கிய ஆலோசகர், மெல்பேண் தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலியா.

3) தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகை - இணை ஆசிரியர்.

4) இலக்கிய ஆலோசகர் குழுவின் தலைவர், அக்கினிக்குஞ்சு மின்னிதழ், அவுஸ்திரேலியா.

5 ) கல்வி இயக்குநர்/ ஆலோசகர் - விக்டோரிய இந்துக் கல்வி மையம், அவுஸ்திரேலியா.

6) பன்னாட்டு இலக்கிய ஆலோசகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்.

ஆகிய பணிசார் செயற்பாடுகளில்  உள்ளார் 

அவர் பெற்ற விருதுகள் 

2016 'சான்றோர் விருது'
சிட்னி கம்பன் கழகம்.

2016 'பூந்தமிழ்க் கவிஞர்'
உலகத் திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம், இந்தியா.

2016 'கவிசாகரம்'
மெல்பேண் பிராமண ஒன்றியம், அவுஸ்திரேலியா.

2015 யாழ்ப்பாணம்,'செந்தமிழ் அறிஞர்' விருது. இந்துக்குருமார் ஒன்றியச் செயலர்.

2000 'முத்தமிழ் வித்தகர்'
மேற்கு அவுஸ்திரேலிய கலை மன்றம்.

1980 'சொல்லின் செல்வர்' விருது,
தீவக கலை பண்பாட்டுக் கழகம், யாழ்ப்பாணம்.

2017 'மரபுப் பாமணி'
தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி, இந்தியா.

'பன்முகம் எனும் இன் "நூல் சம்யமுகம் ,சமூகமுகம் ,இலக்கியமுகம் என்னும் மூன்றும் தன்னகத்தேகொண்டுள்ளது 


தன்  முகத்தைஅறிஞ்ர்  பன்முகம்மூலம்அரிய கட்டுரைகளாகத்  தந்துள்ளார் 
ஜெய ராமசர்மாவின் பன்னூல் புலமை ,பல்துறை அறிவை அறிவிக்கும் ஆவனங்களாக உள்ளன 


 சகோதரர்ஜெய ராமசர்மாஅவர்களுக்கு தடாகம் பன்னாட்டு அமைப்பின் மனம்  நிறைந்தவாழ்த்துக்கள்


 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் பன்னாட்டு அமைப்பு 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.