புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)
06-நூல் -"அஞ்சிறைத்   தும்பி"( இலக்கிய கட்டுரை ) 

முதல்பதிப்பு -ஜூலை -2017

சுடர்விழி இல்லம்  வெளியீடு -

112-பக்கங்கள் , விலை 110/=இந்திய ரூபா 

தமிழ் இலக்கியப்பரப்பு விரிந்து தன்னில் எண்ணற்ற இலக்கிய வகைகளைக் கொண்டு விளங்கும் பேறுடையது 
உலகின்   மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி சங்க காலத்தில் வளமான நிலையில் இருந்தது 
இக்காலத்தில் அகத்தியம் ,தொல்காப்பியம் ,சங்க இலக்கியங்கள் ,இசை நூல்கள் .கூத்து .உரி .சிற்றிசை பேரிசை முதலான நூல்கள் படைக்கப்பட்டன கால வெள்ளத்தில் ஒழிந்தது போகாத் தொல்காப்பியமு ம் ,சங்க இலக்கியங்ககளும்  சிதைவின்றிக் கிடைத்துள்ளன .இவையே இன்று தமிழ் மொழி பெற்றுள்ள "செவ்வியல் மொழி "என்னும் பேற்றுக்குக்  காரணமாக அமைந்தவை     

பண்டைத்  தமிழிலக்கிய நூல்கள் தமிழர்களின் நாகரிகம் ,பண்பாடு ,பழக்க வழக்கம் .நம்பிக்கைகள் ,வாழ்க்கைமுறைகள் ,வழிபாடு ,முதலான கூறுகளைத் தன்னகத்தே கொண்டு    விளங்குகின்றன 


தமிழ் மொழியில் விளங்கும் மரபிக்கணம்,மரபிலக்கியம்இரண்டையும் கற்றுத்  துறைபோகிய காரணத்தால் திரு .அர .விவேகானந்தன்எம் .ஏ)  அவர்களின் மனதில் எழுந்த உந்துதல் "அஞ்சிறைத்   தும்பி"என்னும் நூலாகமலந்து ள்ளது
ஆசிரியா பணியுடன் .தரமான எழுத்துப்  பணியினையும் மேற் கொண்டு  வரும் இவருடைய பணிபோற்றத்தக்கது இந்த நூலின் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆராய்சசி  செய்யும்   மாணவர்களுக்கு பெரிதும்பயன்படும்

அர .விவேகானந்தன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ,ஓட நகரம் ஊரில் 1982ஆம் ஆண்டு நா அரங்கநாதன் -முனியம்மா ஆகிய இணையருக்கு மகனாகப்பிறந்த்தார் 
மாண்ட கௌத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழ்க்கல்வியை முடித்தார் 
 இளங்கலை ,முதுகலை .ஆய்வியல் நிறைஞ்ர்  பட்டங்களையும் பெற்றார் 

தஞ்சாவூரில் உள்ள ந .மு .வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி  பெற்று பல்கலைக் கழக அளவில் தேர்ச்சி 
பெற்றார் அத்தோடு யு .ஜி .சி .(நெட் )தேர்ச்சிபெற்றுள்ளார் 
"கதிர் முருகு ","பாட்டு வழியில் பாவலர் வையவன் ""ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள் "பட்டுக்கிளியே வா வா வா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார் 
இவர் கவிதை எழுதும் பணியைப்பாராட்டி பைந்தமிழ்ச் செல்வன் ,கவியருவி ,பைந்தமிழ்ப் பாவலன்,கவித்தாமரை .அமுதக்கவி ,கவித்திலகம் போன்ற பல  விருதுகளைப்  பெற்றுள்ளார்

தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின்  நிறைவான வாழ்த்துக்கள் 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் பன்னாட்டு அமைப்பு  

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.