புதியவை

அமைதி...கவிதைஷேக் அப்துல்லாஹ் அ அதிராம்பட்டினம்.
அமைதி யதை யிழந்தேன்
அறிந்துக் கொள்ள யதை விழைந்தே !
அறிந்தவைகள்
அனைத்தும் காணாமல் போகலாம் !
உண்டானவைகள் காணாமல் போவது நிகழ்வு !
நிலையற்றதில் நிலைத்திருக்க யியலாது !
இயலாததென்றால்... செயலற்றே இல்லாமை யாகுதலா ?
இல்லாமை யென்றால் இருப்பதை யென்ன சொல்ல ?
மாற்றம் நிகழ்வதால்
இல்லை யென்பதும்... இல்லை !
தோற்றம் மாறுவதால்
எல்லாம் என்பதிலும்... இல்லை !
இருப்பாகி யில்லையதும் எடுத்த கோலமதும்
எண்ணிக்கை யெல்லை யற்று நீளுவதும்
சர்வம் என்று தன்னைச் சுட்டியும்
சகலமும் சரிநிகர் அற்று காட்டியும்
அருவின் ஆக்கமாய் அதுவில் ஆனவைகள்
அதனின் சுயத்தில் தன்னையும் கண்டிடவும் !...
உருவம் ஒன்றதன் நிலைகளாய்த் தெரிந்திடின்
உண்டானத் தோற்றத்தில் புண்ணியம் ஆகிடுதலோ !
எதற்கும் நிகரில்லா யெடுத்தக் குணத்திலும்...
அதற்கும் இல்லை அந்தம் என்பதிலும் !
இதற்குள் எண்ணம் இருக்கும் வண்ணம்
விதத்தில் சமைந்த வியப்பிலும் ! அவைகளுமே !
எண்ணமதில் உண்டாகும்
எல்லா வடிவமும்
எப்படியென்றக் கேள்வியில்
எல்லைவிரிந்தே போகும் !
எட்டிடின் அமைதியாகும் !
ஆங்கே !
ஏதோ வோர் ஒலி !
எப்போதும் மனதினில்...
மாறாத நிலையில் !
மணியோசை !
தனியோசை !...
மனமென்பது வோர் உண்டுமை !
உண்டானதால்...
உண்டுமைக்கு முன் உள்ளமை !
உள்ளதால்...
உள்ளமதில் அவ்வொலி வுண்டாகும் !
உள்ளோம் என்பதை வுணர்த்திடவோ !
ஒலியில் உள்ளம் முயன்றும்
ஓர்மையில் அமைதி மலர்ந்தும்
அமைதியில் ஆற்றல் பிறந்தும்
அதனையறிய யனைத்தாய் ஆனதோ !
அனைத்தாய் ஆனது கண்டும்
ஆதியும் அந்தமும் தேடியும்
அதுவுமில்லை யென்றே வுணரவோ !
சும்மா யிருப்பதில் சுகமில்லை
சுழற்சியில் பலதாகும் எல்லை !
தம்மில் பெரிய தாகியும்
அணுவைவிடச் சிறிய தாகியும்
நம்மையும் உண்டாக்கும் உண்மை !
நம்மிலே தேடும் தன்மை
இம்மைப் பேறும் கிட்டிடும்
இதயம் தொட்டால் நாமில்லையாமே !
தொகுப்பும் தொலைந்துப் போகும் !
துவக்கம் நின்ற உண்மை !
தோற்றம் மறைவு அற்றத் தன்மை
தொட்டுவிடத் தெரியும் அந்த ஒருமை !
உணர வேண்டிச் சுழற்சி !
உண்டாகும் பலவானத் திறட்சி !
இருப்பைக் காட்டும் மீட்சி !
இல்லை யெடுக்கும் காட்சி !
இல்லை யிருப்பதே யெல்லை !
எல்லாம் காட்டிடும் எல்லை...
யில்லை யிருக்கும் எல்லை !
எண்ணிக்கைத் தருதே பாரும்
எடுத்ததும் வொன்றே யாகும் !
உண்டு யென்றாலும் உண்டு
இல்லை யென்றாலும் உண்டு
என்று வுணரும் ஒன்றே !
தானே தன்னில் தானானது !
தன்னை ருசித்தே யமைதியானது !தடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.