புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - புலவர் -பாவலர் கருமலைத்தமிழாழன்நூல் -"செப்பேடு "மரபுக்கவிதைகள்" 

முதல்பதிப்பு -ஏப்ரல்  -2016

 பதிப்புரிமை -வசந்தா பதிப்பகம்  

176-பக்கங்கள் , விலை 150/=ரூபா (இந்தியா)
கி.நரேந்திரன்இயற்பெயர்புனைபெயர்கருமலைத்தமிழாழன்
சொந்த ஊர்கிருட்டிணகிரி (கருமலை)கல்வித்தகுதி  புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்.,
25 ஆண்டுகள் தமிழாசிரியர், 10 ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளித்   தலைமையாசிரியர்                                              
வாழ்க்கைக்கு ஒழுக்கத்தைப் பேசும்பலரும் கவிதைக்கு வரும்பொழுது மறந்து விடுகின்றனர் .
எப்படியும்வழலாம்  என்பதை யாரும் வாழ்க்கையாக ஏற்பதில்லை .அதுபோலத்தான் கவிதையும் 
கவிதை என்று சொல்லும்போதே அதற்கொரு நெறிமுறை இருக்க வேண்டும் கவிதைக்கு யாப்பேய் தேவையில்லை என்றால் வாழ்க்கைக்கு  ஒழுக்கமே தேவையில்லை என்றாகிவிடும் 
உரைநடையே கவிதை னென்று ஊர்வலம் வரும் இந்த நாளில் ,உரை வீச்சுக்கே  இதழ்கள் மதிப்பளித்து வெளியிடும் இந்த நாளில்,மரபுப்பாடல்களை மதிப்பவர்களும் இருக்கின்றார்கள்,மரபினை போற்றி வெளியிடும் ஏடுகளும் உள்ளன .குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையன்று .  ஒரு கருத்தை கவிதையில் சொல்லும் பொழுது அது அழகும் ஆற்றலும் ,துடிப்பும் பெற்று   விளங்கும் .மரபிலே சொல்லும் பொழுது இன்னும் சிறக்கும் மார்பு வழுவாத இவருடைய கவிதைகளை பன்னாட்டு  அமைப்புக்கள்  வெளியிட்டு பெருமைப் படுத்தியுள்ளன 
மரபுக் கவிதைகள் வடிப்பதில் மிக வல்லவர் இவர் நயத்தோடும் ,மனதின் ஆழப் பதியுயுறுமாறும் கவிதைகளைப் படைத்துள்ளார் புலவர்         
பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களால் நிறுவப்பட்ட குயில் ஏடு 1969 ல் முதற்கவிதை வெளிவந்துள்ளது

 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ள
வெளிவந்த கவிதை நூல்கள்:

                                   01.         நெஞ்சின் நிழல்கள் (1976)
                                   02.         மலர்விழி (காவியம் (1978)
                                   03.         காவியத்தலைவன் (1978)
                                   04.         காற்றை மணந்த கவிதைகள் (1995)
                                   05.         நீர்க்கால்கள் (1998)
                                   06.         ஒப்பனைப்பூக்கள் (1998)
                                   07.         மண்ணும் மரபும் (1999)
                                   08.         தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
                                   09.         வீணை மத்தளமாகிறது (2000)
                                   10.         மரபின் வேர்கள் (2002)
                                   11.         புதிய குறுந்தொகை (2003)
                                   12.         வேரின் விழுதுகள் (2004)
                                   13.         களம் வெல்லும் கலைஞர் (2005)
                                   14.         சுவடுகள் (2008)
                                   15.         உன்முகமாய் இரு (2010)
                                   16.         அருள்மிகு மரகதாம்பிகை
                                      சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)
                                             .       கல்லெழுத்து (2014 )
  உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள் :
                                   18.       புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)
                                   19.         பண்பில் வாடை (2001)
                                   20.         திருக்குறள் (உரை) (2000)
                                   21.         ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர
                                      சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு(2001)
  சிறப்பு :         01.         தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட்
                                                பகுதியில் கவிதைபாடமாக சேர்க்கப்பட்டது.
                                   02.         (அ) வீணை மத்தளமாகிறது
                                   (ஆ) வேரின் விழுதுகள்
                                      - ஆகிய நூல்கள் எம்ஃபில் பட்டத்திற்காக ஆய்வு
                                      மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுபட்டம்
                                      வழங்கப்பட்டுள்ளது.பெற்ற விருதுகள்   
01.     சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம்  ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.
02.     ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.
03.     சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.
04.     தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.
05.     உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
06.     நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது.
07.     உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது.
08.     டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
09.     தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.
10.     தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது.
11.     கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.12.          சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.
13.     அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.
14.     சேலம் “சங்கொலி” இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் “தேன்மழைக்கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
15.     2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
16.  1004ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக  மணலூர் பேட்டை தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுத்து பைந்தமிழ்ச்செல்வர் விருதும், பொற்கிழியும் வழங்கியது.
   நூல்கள் பெற்ற பரிசுகள் :
01.     பாரதஸ்டேட் வங்கி 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.02.   பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.03.          சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.04.       அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது. கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள்   :
01.     மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி “வருமோ புதிய உலகு” என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
02.     பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை “புதிய சமுதாயம் படைப்போம்” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
03.     ஈரோடு தமிழ்ப் பேரவையும், துளி இதழும் இணைந்து நடத்திய “தமிழ் ஒளி ஓங்கும்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
04.     தினகரன் நாளிதழ் நடத்திய தொழில்மலர் கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
05.     தமிழ் படைப்பாளர்கள் சங்கம் 2013இல் “பொசுங்கட்டும் பொய்மை” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
06.     கவிஞர் செந்தமிழ்ச் செழியன் அறக்கட்டளை “மயக்கத்தில் தமிழன்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
07.     பெங்களுர்த் தமிழ்ச்சங்கம் 2012 பொங்கல் விழாவை ஒட்டி “அயலகத்தமிழர்” என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
08.     கண்ணியம் இதழ் அதன் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களின் 70ஆம் பிறந்த நாளை ஒட்டி “தடை தகர்த்து வாழும் தமிழ்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
09.     கவிக்குயில் இதழ் “ஊழலற்ற புதிய சமுதாயம் காண” எனும் தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
10.     புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகம் “குழந்தைத் தொழிலாளர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.
11.     தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கமும், பரிவு இதழும் இணைந்து 2013இல் “வெகுண்டெழுவோம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
12.     இலண்டன் தமிழ்ச்சங்கம் உலக அளவில் “புதுயுகத்தமிழர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.
13.     வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் இலக்கியப்பீடம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
14.     கவிக்கொண்டல், உரத்த சிந்தனை, குயில், மின்னல் தமிழ்ப்பணி, தெளிதமிழ், நற்றமிழ், சோலைக்குயில், இதழ்கள் நடத்திய வெண்பா, விருத்தப்பா போட்டிகளில் பலமுறை முதல்பரிசுகள்.
15. ஐதராபாத் நிறைதமிழ் இலக்கிய வட்டம்  சுட்டுவிரல் தலைப்பில்  இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
   தமிழ் வளர்ச்சிப் பணிகள் :
01.     மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் உலகத் தமிழ்க்கழகம் தொடங்கிய போது தருமபுரி மாவட்ட அமைப்பாளராகத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தார்.
02.     தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம் பெறச்செய்யத் தனியாளாக நின்று போராடியபோது 1972இல் பணியாற்றிய தமிழாசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
03.     தென்மொழி, காஞ்சி, குயில் போன்ற இலக்கிய இதழ்களைத் தருமபுரி நகரச் சுற்று புறங்களில் முகவராக இருந்து அறிமுகம் செய்தார்.
04.     கன்னடம், தெலுங்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படும் ஒசூர் பகுதியில் 1985 முதல் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
 இலக்கிய நிகழ்ச்சிகள் :
01.     பெங்களுர், பம்பாய், ஐதராபாத், தில்லி, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ் சங்கங்களில் இலக்கிய சொற்பொழிவு, கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
02.     மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் அழைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
03.     தமிழகம் மற்றும் அயலகங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
04.     பொதிகை, சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
05.   இலங்கை   தடாகம்  இலக்கிய  வட்டத்தின்  கவியருவி  விருது பெற்றவர்.
06.Wepsite: www.karumalaithamizhazhan/com
தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின்  நிறைவான வாழ்த்துக்கள் 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
மைப்பாளர் 
தடாகம் பன்னாட்டு அமைப்பு  

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.