புதியவை

மழலை கவிதை கவிஞர் ராம்க்ருஷ்
பஞ்சினும் மென்மை பச்சிளங் குழவியின் கைகளில்
தஞ்சமாகித் தொட்டுக் கையிலேந்தி முத்தமிட்டேன்
பிஞ்சுக் கன்னங்கள் தடவி உச்சி முகந்தேன் அன்பில்
வஞ்சகமில்லா புன்சிரிப்பில் குழவி எனை வீழ்த்தியதே
பால்மணம் வீசும் சிறு வாயிலிருந்த நாக்கசைந்தது
கால்களை உதைத்து விளையாட எழுத்துகள் வந்ததோ
சூல் கொண்ட சொற்கள் சிதைந்து இன்பத் தேனாய்
மேலண்ணம் கீழண்ணம் ஒட்டி உறவாட சங்கீதமானதோ
மழலை மிழற்றும் பச்சைக் குழந்தையின் பாங்கு
குழலோசையினும் மென்மையாய் நெஞ்சு தொடுமே
சுழலும் நாக்கோடு கைகளும் சித்து விளையாட்டில்
பழகிய பசுபோல மழலைபேச எங்கும் இன்ப மயமே
மழலைச் சொல் கேட்டால் தீயவனும் இளகுவானே
உழலும் துன்பங்கள் விலகிச் சென்று வெளி நிற்குமே
பழகும் பாங்கில் அன்பு வெள்ளம் அலையடிக்குமே
அழகுச்சூழல் ஆலவிருதாய் எங்கும் பரவி நிற்குமே
பொருள் காண்பதிலோர் இன்பம் மழலைச் சொல்லுக்கு
இருள் விலகி ஒளிவீசிடும் கதிரவனாய் குழவி முகம்
உருளும் கண்கள் மின்னும் விண்மீன்களாய்ப் பளபளக்க
அருளும் இன்பம் விவரிக்க இயலாத மழலை இன்பமே.

தடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள் 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.